Bread Cutlet Recipe - பிரட் கட்லெட் செய்முறை


வீட்ல பிரட் இருக்கா? இப்படி பிரட் கட்லெட் செஞ்சி கொடுங்க, வீட்டில் அனைவரும் ஆசையா சாப்பிடுவாங்க! மிகவும் சுலபமான பிரட் கட்லெட்  செய்முறை தமிழில் இதோ! 

 10 - 12 கட்லெட் 

தேவையான பொருட்கள் 

  • உருளைக்கிழங்கு - 250 கிராம் 
  • சிறிதாக வெட்டிய வெங்காயம் - 2 மே.க (நிரப்பி)
  • சிறிதாக வெட்டிய பச்சைமிளகாய் - 1 மே.க (நிரப்பி)
  • சிறிதாக வெட்டிய உள்ளி - 1 தே.க (நிரப்பி)
  • சிறிதாக உதிர்த்த பாண் துண்டுகள் - 2 மே.க (நிரப்பி)
  • முட்டை - 3
  • ரஸ்க் தூள் - 3 மே.க 
  • ரேஸ்ற் மேக்கர் - அளவிற்கு 
  • உப்புத்தூள் - அளவிற்கு 
  • மிளகுதூள் - அளவிற்கு 
  • தேங்காயெண்ணை - 3 மே.க 
  • மஞ்சள் தூள் - அளவிற்கு 
  • தனி மிளகாய்த்தூள் - 1 தே.க (மட்டாக)
  • கோதுமை மாவு - 2 மே.க (நிரப்பி)

செய்முறை 

  1. உருளைக்கிழங்கை அவித்து மசித்து வைத்துக் கொள்க. 

  2. தாச்சியில் எண்ணெயை ஊற்றி கொதித்ததும் வெட்டிய வெங்காயம், பச்சைமிளகாய், உள்ளி என்பவற்றையிட்டு அரைப் பதமாக வதக்கியவுடன் மசித்த உருளைக்கிழங்கையிட்டு நன்கு கிளறிய பின் உப்புத்தூள், மிளகாய்த்தூள், மிளகுதூள், மஞ்சள் தூள் என்பவற்றையிட்டு சேர்த்து உதிர்த்திய பாண் துகள்களிட்டு கலந்து கொண்டபின் இரண்டு முட்டைகளை அதனுள் உடைத்துவிட்டு இடைவிடாது கிளறி கலவை வெந்ததும் ரேஸ்ற் மேக்கர் சேர்த்து இறக்கி ஆறிய பின் தேசிப்பழமளவு உருண்டைகளாகப் பிடித்து வைத்துக் கொள்க.

  3. ஒரு முட்டையை உடைத்து கோப்பையில் விட்டு நன்றாக அடித்து வைக்குக.

  4. பின்பு ஒவ்வொரு உருண்டைகளாக எடுத்து கோதுமை மாவில் புரட்டி முட்டையில் தோய்த்தெடுத்து ரஸ்க்தூளில் புரட்டியெடுத்துக் கொதிக்கும் எண்ணெயிலிட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுத்துக் கொள்க.       

Post a Comment

0 Comments