Cabbage Vada Recipe - முட்டைக்கோஸ்/ கோவா வடை செய்வது எப்படி?


முட்டைக்கோஸ்/ கோவா வடை வீட்டில் செய்வது எப்படி? முட்டைக்கோஸ் வடை ஒரு சுவையான மற்றும் விரைவான ஓர் மாலை நேர டீ டைம்  ஸ்நாக்ஸ் ரெசிபியாகும்.  இந்த ரெசிபியிற்கான தேவையான பொருள்கள் மற்றும் செய்முறை இதோ தமிழில். 

15 - 20 வடைகள் 

தேவையான பொருட்கள் 

  • கடலைப் பருப்பு - 250 கிராம் 
  • கோவா - 250 கிராம் 
  • உள்ளி - 5 பல்லு 
  • நற்சீரகம் - 1/2 தே.க
  • சிறிதாக வெட்டிய பச்சைமிளகாய் - 2 மே.க (நிரப்பி) 
  • சிறிதாக வெட்டிய கறிவேப்பிலை - 1 மே.க
  • சிறிதாக வெட்டிய வெங்காயம் - 4 மே.க (நிரப்பி)
  • உப்பு - அளவிற்கு 
  • தேங்காயெண்ணெய் - 1/2 போத்தல் 

செய்முறை 

  1. கோவாவை சிறு சிறு துண்டாக வெட்டி கழுவி நீரை வடியவிட்டு எடுத்து வைத்துக் கொள்க.

  2. கடலைப் பருப்பை 6 மணி நேரம் ஊறவைத்தெடுத்து உள்ளி சேர்த்து முக்கால் பதமாக அரைத்துக் கொண்ட பின்பு வெட்டி வைத்துள்ள கோவாவையும் சேர்த்து சிறிது நேரம் அரைத்தெடுத்துப் பாத்திரத்திலிட்டு வெட்டி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், சீரகம், கறிவேப்பிலை, அளவிற்கு உப்புத்தூள் என்பன சேர்த்து நன்கு பிசைந்து கொண்ட பின்பு தேசிப்பழம் அளவிற்கு உருண்டைகளாக பிடித்துவைத்துக் கொள்க.

  3. எண்ணெயைக் கொதிக்க வைத்து பிடித்து வைத்துள்ள உருண்டைகளை எடுத்து மெதுவாகத் தட்டிக் கொதிக்கும் எண்ணெயில் போட்டுச் சிவக்கப் பொரித்தெடுத்து ஓரளவு சூட்டுடனேயே பரிமாறலாம்.   


Post a Comment

0 Comments