Pasta Cutlet Recipe - பாஸ்ரா கட்லெட் செய்வது எப்படி?


சுவையான பாஸ்ரா கட்லெட் செய்வது எப்படி? செய்முறை தமிழில் இதோ! பாஸ்ரா கட்லட் ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான குழந்தைகளுக்கு ஏற்ற ஓர் உணவு வகையாகும். 

12 - 18 கட்லெட் 

தேவையான பொருட்கள் 

  • உருளைக்கிழங்கு - 200 கிராம் 
  • ரின் மீன் (சிறியது) - 1 ரின் (155 கிராம்)
  • சீஸ் - 2 துண்டு (25 கிராம்)
  • பச்சைப் பட்டாணிக்கடலை - 50 கிராம் 
  • கஜு - 50 கிராம் 
  • மிளகாய்த்தூள் - 1 தே.க (நிரப்பி)
  • உப்பு - அளவிற்கு 
  • மிளகுதூள் - அளவிற்கு 
  • தேசிப்புளி - அளவிற்கு 
  • சி.வெ. வெங்காயம் - 2 மே.க 
  • ரோஸ்ற் மேக்கர் - சிறியது 
  • தேங்காயெண்ணை - 1/2 போத்தல் 
  • கோன் பிளா - 4 மே.க 
  • முட்டை வெண்கரு - 1
  • பேக்கிங் பவுடர் - 1 தே.க 
  • மாஜரின் - 1 தே.க 

செய்முறை 

  1. பச்சைப் பட்டாணிக் கடலையை 3 மணிநேரம் ஊறவைத்து அவித்தெடுக்க.

  2. உருளைக்கிழங்கை அவித்து தோலுரித்து மசித்து வைக்குக.

  3. சீஸை ஸ்கிரப்பரில் துருவி, கஜுவை சிறுசிறு துண்டுகளாக வெட்டி வைக்குக.

  4. தாச்சியை அடுப்பில் வைத்து சூடானதும் சீஸை இட்டு உருக வைத்து சீஸ் உருகியதும் வெங்காயத்தையிட்டு வதங்கவிட்டு வெங்காயம் முக்கால் பதமாக வதங்கியவுடன் கஜுவையிட்டு சிறிது நேரம் பொரியவிட்ட பின் அதனுள் மிளகாய்த்தூள், உருளைக்கிழங்கு, ரின் மீன், கடலை என்பவற்றையிட்டு நன்கு சேர்த்துக் கொண்டபின்பு உப்புத்தூள், மிளகுதூள் என்பவற்றை அளவிற்குச் சேர்த்து இறக்கிக் கொள்க.

  5. பின்பு கலவையில் தேசிப்புளி, ரோஸ்ற் மேக்கர் என்பன இட்டு நன்றாகச் சேர்த்து அளவான உருண்டைகளாக உருட்டிக் கொள்க.

தோய்ப்பான் கரைசல் தயாரிக்கும் முறை 

  1. பாத்திரத்தில் மாஜரினையிட்டு நன்கு அடித்துக் கொண்டபின்பு அதனுள் கோன்பிளா, பேக்கிங் பவுடர் என்பன கலந்து முட்டை வெண்கரு விட்டு நன்கு பிசிறிக் கொண்ட பின்பு உப்புத்தூள் அளவிற்குச் சேர்த்து தண்ணீர் விட்டு கூழ்ப் பதத்திற்கு கரைத்துக் கொள்க.

  2. பின்பு உருண்டையாகப் பிடித்த கறிக் கலவையை கரைசலில் தோய்த்தெடுத்துக் கொதிக்கும் எண்ணெயிலிட்டுப் பொன்னிறமாக பொரித்தெடுத்துக் கொள்க.      

Post a Comment

0 Comments