Vegetable Cutlet Recipe - மரக்கறி கட்லெட் செய்வது எப்படி


சுவையான வெஜிடபிள் கட்லெட் செய்வது எப்படி? செய்முறை தமிழில் இதோ! வெஜிடபிள் கட்லெட் மிகப் பிரபலமான மற்றும் ஆரோக்கியமான ஓர் மாலை நேர சிற்றுண்டாகும். 

 12 - 15 கட்லெட் 

தேவையான பொருட்கள் 

  • உருளைக்கிழங்கு - 250 கிராம் 
  • வாழைக்காய் - 1
  • கரட் - 100 கிராம் 
  • சிறிதாக வெட்டிய வெங்காயம் - 2 மே.க (நிரப்பி)
  • சிறிதாக வெட்டிய பச்சைமிளகாய் - 2 மே.க (நிரப்பி)
  • சிறிதாக வெட்டிய கறிவேப்பிலை  - 1 மே.க (நிரப்பி)
  • சிறிதாக வெட்டிய உள்ளி  - 1 தே.க (நிரப்பி)
  • கடுகு - 1 சிட்டிகை 
  • சீரகம் - 1 சிட்டிகை 
  • மிளகுதூள் - அளவிற்கு 
  • உப்புத்தூள் - அளவிற்கு 
  • மாஜரின் - 1 மே.க (மட்டாக)
  • சில்லி சோஸ் - 1 மே.க 
  • தே.எண் - 1/4 போத்தல் 
  • மாக்கரைசல் 
  • கோதுமை மா - 100 கிராம் 
  • உப்பு - அளவிற்கு 
  • ரஸ்க் தூள் - 3 மே.க (நிரப்பி)

செய்முறை 

  1. உருளைக்கிழங்கு, வாழைக்காய் என்பவற்றின் தோலைச் சீவி பிளந்து முக்கால் பதத்தில் அவித்து எடுத்துக் கொள்க.

  2. கரட்டின் தோலைச் சுரண்டி வைத்துக் கொள்க.

  3. பின்பு கரட், உருளைக்கிழங்கு, வாழைக்காய் என்பவற்றைத் தனித்தனியாக ஸ்கிரப்பரில் துருவியெடுத்துக் கொள்க.

  4. தாச்சியில் மாஜரினையிட்டு காயவைத்து காய்ந்தபின் கடுகைப் போட்டு வெடிக்க வைத்து வெட்டிய வெங்காயம், பச்சை மிளகாய், உள்ளி, கறிவேப்பிலை, சீரகம் என்பவற்றைப் போட்டு சிறிது நேரம் வதக்க வைத்து பின் துருவி வைத்துள்ள மரக்கறிவகை, மிளகுதூள், உப்புத்தூள் என்பவற்றையிட்டு நன்கு சேர்த்து மூடி வதங்கவிட்டு வதங்கிய பின்பு கரண்டியால் நன்றாக மசித்துச் சேர்த்து இறக்கிக் கொள்க.

  5. பாத்திரத்தில் மாவையரித்துப் போட்டு அளவிற்கு உப்பும் தண்ணீரும் விட்டுக் கூழ்ப்பதமாக கரைத்துக்கொள்க.

  6. பின்பு தயாரித்து வைத்துள்ள கறிக்கலவையை தேசிப்பழமளவு உருண்டைகளாக பிடித்துக்கொண்டு மாக்கரைசலில் தோய்த்தெடுத்து ரஸ்க் தூளில் நன்கு புரட்டியெடுத்து கொதிக்கும் எண்ணெயிலிட்டுப் பொரியவிட்டுப் பொரிந்த பின்பு முள்ளுக்கரண்டியால் மறுபுறம் திருப்பிப் பொரிய விட்டெடுத்துப் பரிமாறலாம்.         

Post a Comment

0 Comments