Bun Type II Recipe - பணிஸ் வகை II செய்வது எப்படி?


வீட்டிலேயே பேக்கரி ஸ்டைல் பணிஸ் செய்வது எப்படி? செய்முறை இதோ தமிழில்! இந்த இலகுவான செய்முறையையை பின்பற்றி வீட்டிலேயே எளிமையாக பணிஸ் தயாரித்து சுவைத்து மகிழுங்கள். 

28 - 30 பணிஸ் 

தேவையான பொருட்கள் 

  • கோதுமை மாவு - 1 கிலோகிராம் 
  • சீனி - 250 கிராம் 
  • பீகைவ் மாஜரின் - 125 கிராம் 
  • முட்டை - 2
  • ஈஸ்ட் - 15 கிராம் 
  • உப்புத்தூள் - 1 தே.க (நிரப்பி)
  • தண்ணீர் - 1/2 லீற்றர் (முட்டை பாவிக்கவிட்டால் 600 மி.லீ தண்ணீர்)

செய்முறை 

  1. மாவை அரித்து மேசையிலிட்டு ஈஸ்ட் சேர்த்து கலந்து மாவைக் குவியல் போலாக்கி நடுவே ஓர் குழி அமைத்துக் கொண்டபின் அக் குழியினுள் 10 கிராம் சீனி, உப்பு, தண்ணீர் என்பன இட்டு மாவைக் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீருடன் சேர்ந்து நன்றாகப் பிசைந்து 1 மணிநேரத்திற்குப் புளிக்க வைக்கவும்.

  2. பின்பு குழைத்த மாவுடன் பிகைவ் மாஜரின், மிகுதித் சீனி என்பவற்றையிட்டு நன்றாகப் பிசைந்து (விரும்பினால் முட்டையை சேர்த்துக் கொள்ளவும்) உருண்டை வடிவமாக்கி மீண்டும் 1 மணிநேரம் புளிக்க வைக்கவும்.

  3. 1 மணி நேரத்தின் பின் குழைத்துவைத்த மாவை 140 கிராம் நிறையுள்ள உருண்டைகளாக நிறுத்தெடுத்து அதை இரண்டு சம பகுதியாக பிரித்து ஒவ்வொரு உருண்டையையும் மேசையில் வைத்து உள்ளங்கையால் நன்றாக அமர்த்தி பந்து வடிவில் அழுத்தமாக உருட்டி எண்ணெய் பூசிய தட்டில் 2 அங்குல இடைவெளிவிட்டு அடுக்கி (விரும்பினால் மேற்பரப்பிற்கு முட்டைச்சாறு பூசி) முக்கால் மணிநேரம் புளிக்க வைத்து (உப்பு வைத்து) எடுத்து 10 நிமிடங்களிற்கு 180C இல் அவனில் வைத்து பேக் செய்து எடுக்கவும்.     


Post a Comment

0 Comments