Skath Broth Soup - ஸ்காத்பிராத் சூப் செய்முறை


சத்தான, சுவையான ஒரு ஸ்காத்பிராத் சூப் செய்வதற்கான எளிய செய்முறை  இதோ தமிழில். தினமும் காலையில் இப்படியான சத்துள்ள சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.  

தேவையான பொருட்கள் 

  • காலி பிளவர் - 200 கிராம் 
  • முட்டைக் கோஸ் - 200 கிராம் 
  • கரட் - 200 கிராம் 
  • பட்டை லவங்கம் - 2
  • வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் 
  • கரம் மசாலா - 1/2 டீஸ்பூன் 
  • மைதா - 1 டீஸ்பூன் 
  • பெப்பர், உப்பு - தேவையான அளவு
  • வெங்காயத்தாள் - சிறிதளவு(அரிந்தது)

செய்முறை 

  1. பட்டை, லவங்கம், காய்கறிகளை வெண்ணெயில் போட்டு வதக்குங்கள். இதே வெண்ணெயில் வெங்காயத்தாளை போட்டு வதக்கி தனியாக வையுங்கள்.

  2. தேவையான தண்ணீர் சேர்த்து காய்கறிகளை வேக வையுங்கள். 

  3. காய்கறிகள் வெந்ததும் நீரை மட்டும் வடித்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த நீரில் கரம் மசாலா சேர்த்து கொதிக்க விடுங்கள். 

  4. மைதாவை நீரில் கரைத்து இதில் ஊற்றி ஒரு கொதி கொதிக்க வையுங்கள்.

  5. கொதித்ததும் இறக்கி பெப்பர், உப்பு சேர்த்து மேலே வெண்ணெயில் பொரித்த வெங்காயத்தைப் போட்டு சூடாகப் பரிமாறுங்கள்.  

Post a Comment

0 Comments