Tamarind porridge Recipe - புளிக்கஞ்சி செய்முறை தமிழில்


புளி கஞ்சி, புளிப்பு மற்றும் காரமான ஓர் கஞ்சியாகும். குறிப்பாக தடிமன் அல்லது காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்படக்கூடிய ஓர் சிறந்த உணவாகும். முழுமையான செய்முறை தமிழில் கீழே பெற்றுக்கொள்ளுங்கள்.

4 பேருக்கு போதுமான புளிக்கஞ்சி 

 தேவையான பொருட்கள் 

  • புழுங்கலரிசி - 1 சுண்டு 
  • நெத்தலிக்கருவாடு - 100 கிராம் 
  • வெங்காயம் - 100 கிராம் 
  • செத்தல் மிளகாய் - 10
  • மஞ்சள் - 1 சிறிதுண்டு 
  • மிளகு - 10
  • உள்ளி - 2 பல்லு 
  • கறிவேப்பிலை - 2 நெட்டு 
  • தேங்காய் - பாதி 
  • பழப்புளி (விதைநீக்கியது) - ஒரு பாக்களவு 
  • உப்பு - அளவிற்கு 
  • தண்ணீர் - 3 1/2 போத்தல் 

செய்முறை 

  1. தேங்காய் துருவி ஒரு தம்ளர் நீரையை சிறிது சிறிதாக விட்டு பால் பிழிந்து வைத்துக் கொள்க.

  2. கருவாட்டைக் கழுவி துப்பரவாக்கி வைத்துக் கொள்க. 

  3. வெங்காயத்தை துப்பரவாக்கி அளவான துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்க.

  4. பழப்புளி ஒரு தம்ளர் தண்ணீரில் கரைத்து வைத்துக் கொள்க.
     
  5. செத்தல் மிளகாய், உள்ளி, மிளகு, மஞ்சள் என்பவற்றை அளவிற்கு நீர் சேர்த்து பசுந்தையாக அரைத்தெடுத்துக் கொள்க. 

  6. பின்பு பாத்திரத்தில் 3 போத்தல் தண்ணீரைவிட்டுக் கொதிக்கவைத்து நன்கு கொதித்த பின்பு அரிசியைக் கழுவிப்போட்டு அவியவிடவும். அரிசி அரைப்பதமாக அவிந்தவுன் கருவாடு, வெங்காயம், கறிவேப்பிலை என்பவற்றையிட்டு மூடி அவியவிடவும். 

  7. அரிசி நன்றாக அவிந்ததும், அரைத்த கூட்டு, பால் கரைத்து வைத்துள்ள பழப்புளி அளவிற்கு உப்பு என்பவற்றையிட்டுக் கலந்து மூடி வாசம் வரும்வரை அவியவிட்டு, இறக்கிச் சூட்டுடனேயே பரிமாறினால் அதிக சுவையாகவிருக்கும்.   


Post a Comment

0 Comments