Jijips - ஜீஜீப்ஸ் வகை I


 70 துண்டுகள் 1/2'' X 1/2''

தேவையான பொருட்கள் 

  • சீனி - 250 கிராம் 
  • ஜெலற்றின் - 3 மே .க (மட்டாக) / 20 கிராம் 
  • சித்திரிக்கமிலம் - 1/2 தே .க 
  • கொதிநீர் - 10 மே .க 
  • தண்ணீர் - 10 மே .க / 1/2 தம்ளர் 
  • கலரிங் - 1 தே .க 
  • பெரிய சீனி - 4 மே .க 
  • மாஜரின் - 1 தே .க (தட்டிற்குப் பூசுவதற்கு)

செய்முறை 

  1. ஜெலற்றினைத் தம்ளரில் எடுத்து அதனுள் 10 மே .க நன்கு கொதித்த நீரை விட்டு இத்தம்ளரை பிறிதொரு கொதிநீருள்ள பாத்திரத்தில் அமிழ்த்தி வைத்துக் கொண்டு ஜெலற்றின் முற்றாகக் கரையும்வரை நன்கு கரைத்து அப்படியே கொதிநீருள்ள பாத்திரத்திலுள்ளேயே வைத்துக் கொள்க.

  2. தாச்சியில் சீனியையிட்டு 10 மே .க தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்துக் காய்ச்சுக. பாகு காய்ச்சும் போது சீனி முழுவதும் கரைந்து வெளுவெளுப்பான நுரைப்பதம் தோன்றி மறைந்து பாகு கொதிக்கும் பதத்தை அடைந்ததும் ஒரு குளிர் நீர் கொண்ட பாத்திரத்தில் சிறிதளவை விட்டுப் பார்க்கும் போது நீரில் கரையாமல் தண்ணீரில் பாகு தெரியும் பதத்தை அடைந்ததும் (தொட்டுப்பார்க்கும் போது கையில் பசைபோல ஒட்டும்) தாச்சியை உடனேயே அடுப்பிலிருந்து இறக்கிக் கரைத்து வைத்துள்ள ஜெலற்றின், கலரிங், சித்திரிக்கமிலம் என்பவற்றைச் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்க.

  3. பின்பு மாஜரின் பூசிய ஒரு சதுரவடிவான தட்டில் இக்கலவையை ஊற்றி 12 மணிநேரம் வைத்துக் கொண்ட பின் 1/2'' X 1/2'' அளவான துண்டுகளாக ஒரு கூரான கத்தியால் கீறிக் கொண்டு ஒரு மாஜரின் பூசிய கரண்டியால் ஒவ்வொரு துண்டாகத் தூக்கியெடுத்துப் பெரிய சீனியில் புரட்டியெடுத்துப் பரிமாறலாம்.        

Post a Comment

0 Comments