Ellurandai - எள்ளுருண்டை வகை II


 50 - 60 உருண்டைகள் 

தேவையான பொருட்கள் 

  • எள் - 500 கிராம் 
  • சீனி - 250 கிராம் 
  • லிக்குவிட் குளுக்கோஸ் - 150 கிராம் 
  • தண்ணீர் - 100 மில்லிலீற்றர்
  • கிறீம் ஒவ் டாட்டா - 0.5 கிராம் 

செய்முறை 

  1. எள்ளைத் துப்பரவாக்கி கழுவிக் களைந்து காயவைத்து எடுத்து பொன்னிறமாக வறுத்துக் கொள்க.

  2. 10 கிராம் சீனியைத் தனியாக எடுத்து தாச்சியிலிட்டு வறுத்துக் கெரமல் செய்யவும். கெரமலினுள் கிறீம் ஒவ் டாட்டா, நீர், சீனி என்பன சேர்த்துச் சிறிது நேரம் சூடாக்கவும். பின்பு லிக்குவிட் குளுக்கோஸ் சேர்த்து 245 F இற்கு வெப்பமாக்கிய பின் இறக்கி வறுத்த எள்ளை கொஞ்சம் கொஞ்சமாக இட்டு முழுவதுமாகச் சேர்த்து உருண்டைகளாக உருட்டியபின் ஆறவைத்துப் பொதி செய்து கொள்க.

குறிப்பு 

  • இதே முறையில் கச்சான் அல்வாவையும் தயாரித்துக் கொள்ளலாம்.     

Post a Comment

0 Comments