Vitamin Soup Recipe - விட்டமின் சூப் செய்வது எப்படி?


விட்டமின் சூப் எளிமையாக செய்வது எப்படி? ரெசிபி தமிழில். வைட்டமின் நிறைந்த  இந்த சூப், உடலுக்கு ஆரோக்கியமானது மற்றும் உடல் எடையை குறைக்ககூடியது. 

தேவையான பொருட்கள் 

  • ஆரஞ்சு - 2
  • ஆப்பிள் - 1/2
  • பைனாப்பிள் - 1 பெரிய ஸ்லைஸ் 
  • முந்திரி, பாதாம், பிஸ்தா - 10 கிராம் (வெட்டிக் கொள்ளவும்)
  • தேன் (சர்க்கரை) - தேவையான அளவு 

செய்முறை 

  1. ஆரஞ்சைப் பிழிந்து ஜூஸ் எடுத்துக் கொள்ளுங்கள். 

  2. ஆப்பிளை ஆவியில் வேகவைத்து தோல் நீக்கி மசித்துக் கொள்ளுங்கள். 

  3. பைனாப்பிளைத் துருவி சாறு பிழிந்து வையுங்கள்.
     
  4. ஆரஞ்சு ஜூஸுடன், மசித்த ஆப்பிள், பைனாப்பிள் சாறு சேர்த்து கலந்து கொண்டு, கடைசியாக தேன் சேர்த்து கலக்குங்கள்.

  5. பரிமாறும் முன்பு, வெட்டிய பருப்பு வகைகளைத் தூவிப் பரிமாறுங்கள். 

Post a Comment

0 Comments