Coconut Milk Soup Recipe - தேங்காய்ப்பால் செய்முறை தமிழில்


தேங்காய்ப்பால் சூப் வீட்டில் செய்வது எப்படி. ரெசிபி தமிழில்! இது மிகவும் சுலபமான ஓர் சூப் செய்முறையாகும். இதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் கீழே தமிழில் காண்போம்.

 2 பேருக்கு போதுமான தேங்காய்ப்பால் இரசம் 

தேவையான பொருட்கள் 

  • தேங்காய்ப்பால் - 2 தம்ளர் (பாதி தேங்காய்)
  • தேசிப்பழம் - 1
  • கடுகு - 1 சிட்டிகை 
  • நற்சீரகப்பொடி - 1 மே.க (மட்டமாக )
  • மிளகுத்தூள் - 1 தே.க(மட்டமாக)
  • சிறிதாக வெட்டிய வெங்காயம் - 1 மே. க (நிரப்பி)
  • நல்லெண்ணெய் - 2 மே.க 
  • உப்பு - அளவிற்கு

செய்முறை 

  1. தாச்சியில் நல்லெண்ணெய் விட்டுக் கொதித்த பின்பு, கடுகைப் போட்டு வெடிக்க வைத்து வெடிக்க வைத்து வெங்காயத்தையிட்டு வதங்க விடவும்.

  2. வெங்காயம் நன்றாக வதங்கிய பின்பு சீரகப்பொடி, மிளகுத்தூள், உப்புத்தூள் என்பவற்றையிட்டுக் கலந்து பாலையும் விட்டு நன்றாகக் கலக்கிப் பால் பொங்கிக் கொதிக்கும் வரை இடைவிடாது துளாவிக் காய்ச்சிக் கொதித்ததும் இறக்கி ஓரளவு சூடு ஆறிய பின்பு தேசிப்புளி விட்டுக் கலந்து பரிமாறலாம். 

Post a Comment

0 Comments