Dhal Soup Recipe - தால் சூப் செய்முறை


மிகவும் ஆரோக்கியமான ஓர் தால் சூப்பிற்கான செய்முறை இதோ! இந்த சுவையான மற்றும் ஆரோக்கியமான தால் சூப்பிற்கு தேவையான பொருள்கள் மற்றும் முழுமையான  செய்முறையையை தமிழில் அறிந்துகொள்ளுங்கள். 

தேவையான பொருட்கள் 

  • கடலைப் பருப்பு - 100 கிராம் 
  • துவரம் பருப்பு - 100 கிராம் 
  • சிறு பருப்பு - 100 கிராம் 
  • தக்காளி - 1
  • வெங்காயம் - 1/2 
  • இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன் 
  • எலுமிச்சை சாறு - சில துளிகள் 
  • காய்ந்த மிளகாய் - 2
  • எண்ணெய் - தேவையான அளவு 
  • உப்பு - தேவையான அளவு 
  • கொத்தமல்லித் தழை - சிறிதளவு 

செய்முறை 

  1. பருப்புக்களை வேகவைத்து மசித்துக் கொள்ளுங்கள். தக்காளி, வெங்காயத்தை மிக்சியில் அரைத்து வையுங்கள்.

  2. மசித்த  பருப்புடன் அரைத்த தக்காளி, வெங்காய விழுதை சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள். 

  3. இதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து தேவையான நீர் விட்டு கொதிக்க வையுங்கள்.

  4. கொதித்து வந்ததும் காய்ந்த மிளகாயை எண்ணெயில் போட்டு தாளித்து இதில் கொட்டுங்கள்.

  5. சூப்பை அடுப்பிலிருந்து இறக்கி எலுமிச்சை சாறு சேர்த்து மேலே கொத்தமல்லி தூவிப் பரிமாறுங்கள்.

Post a Comment

0 Comments