Sweet Corn Recipe - ஸ்வீட் கார்ன் சூப் செய்முறை தமிழில் !


ஸ்வீட் கார்ன் சூப் செய்வது எப்படி? வழக்கமாக நாம் ஹோட்டலில் குடிக்கும் ஸ்வீட் கார்ன் சூப்பை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம். செய்முறை தமிழில் இங்கே பெற்றுக்கொள்ளுங்கள். 

தேவையான பொருட்கள் 

  • பேபி கார்ன் - 4
  • சோயா மாவு - 1 டீஸ்பூன் 
  • சர்க்கரை - 1 டீஸ்பூன் 
  • மிளகுத் தூள் - தேவையான அளவு 
  • உப்பு - தேவையான அளவு 

செய்முறை 

  1. பேபி கார்னை வேகவைத்து, மைய அரைத்துக் கொள்ளுங்கள்.

  2. அரைத்த விழுதில் இரண்டரை தம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்க வையுங்கள். 

  3. சோயா மாவை தண்ணீரில் கரைத்து இதில் சேருங்கள். 

  4. சர்க்கரையைப் போட்டு ஒரு கொதி வந்தவுடன் இறக்குங்கள். 

  5. பரிமாறும்போது தேவையான உப்பு, மிளகுத்தூள் போட்டு சூடாகப் பரிமாறுங்கள்.  

Post a Comment

0 Comments