Cumin porridge Recipe - சீரகக்கஞ்சி தயாரிப்பது எப்படி?


சீரக கஞ்சி ரெசிபி தமிழில். இந்த சீரக கஞ்சியை வெயில் காலத்தில் வயதானவர்கள், குழந்தைகள் குடித்தால் உடலுக்கு சத்து கிடைக்கும். இந்த கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம். 

6 பேருக்கு போதுமான சீரகக் கஞ்சி

 தேவையான பொருட்கள்                                                                                                                  

  • பச்சையரிசி - 1 சுண்டு (நிரப்பி)
  • நற்சீரகம் - 2 மே. க (நிரப்பி)
  • மிளகு - 1 தே.க (நிரப்பி)
  • மஞ்சள் - 2'' துண்டு
  • தேங்காய் - 1
  • உப்பு - அளவிற்கு
  • தண்ணீர் - 4 போத்தல் 

செய்முறை 

  1. தேங்காயை துருவி ஒரு போத்தல் தண்ணீரைச் சிறிது சிறிதாக விட்டுப்  பாலைப் பிழிந்தெடுத்துக் கொள்க.

  2. சீரகம், மிளகு, மஞ்சள் மூன்றையும் எடுத்துத் தண்ணீரை அளவிற்குச் சேர்த்துப் பசுந்தையாக   அரைத்தெடுத்துக் கொள்க.

  3. பின்பு அரைத்த கூட்டைத் தேங்காய்ப் பாலிலிட்டுக் கரைத்து வைத்துக் கொள்க.

  4. பாத்திரத்தில் 3 போத்தல் தண்ணீரை விட்டுக் கொதிக்க வைத்துக் கொதித்த பின்பு, அரிசியைக் கழுவிப்போட்டு அவிய விடவும். அரிசி முக்கால்ப் பதமாக அவிந்தபின்பு, கரைத்து வைத்துள்ள தேங்காய்ப்பால், அளவிற்கு உப்பு என்பவற்றையிட்டு மூடி அவியவிடவும்.

  5. கஞ்சி நன்றாகப் பொங்கிக் கொதித்து அவிந்து வாசனைவரத் தொடங்கியதும் நன்றாகத் துளாவி இறங்கிச் சூட்டுடனேயே பரிமாறினால் அதிக சுவையாக இருக்கும்.   

Post a Comment

0 Comments