Chees Soup Recipe - சீஸ் சூப் செய்முறை


கிரீமியான சீஸ் சூப் செய்வதற்கான செய்முறை தமிழில். வீட்டிலேயே இலகுவாக இந்த வித்தியாசமான மற்றும் அதிக ஆரோக்கியமான சூப்பை தயாரித்து பருகி மகிழுங்கள். 

தேவையான பொருட்கள் 

  • சீஸ் - 100 கிராம் 
  • தண்ணீர் - 2 தம்ளர் 
  • கான் ப்ளார் - 2 டேபிள் ஸ்பூன் 
  • மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன் 
  • உப்பு - தேவையான அளவு 

செய்முறை 

  1. சீஸைத் துருவி ப்ரீசரில் வையுங்கள். 

  2. தண்ணீரை கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள். 

  3. கான் ப்ளாரை தனியாக நீரில் கரைத்து கொதிக்கும் நீரில் ஊற்றி கலக்குங்கள். இதில் உப்பு, மிளகுத்தூளைப் போட்டு ஒரு கொதி கொதிக்க விட்டு இறக்குங்கள். 

  4. இறக்கிய சூப்பில் ப்ரீசரில் வைத்த சீஸைத் தூவி சூடாகப் பரிமாறுங்கள். 


 


Post a Comment

0 Comments