Cumin Aviyal recipe - சீரக அவியல் செய்முறை தமிழில்


சீரக அவியல் செய்வது எப்படி? செய்முறை தமிழில். முற்றிலும் ஆரோக்கியமான இது உடலுக்கு சக்தியை தரும் ஒரு உணவு வகை ஆகும். சூப்பரான இந்த சீரக அவியலை இப்போது எப்படி செய்வது என்று பார்க்கலாம். 

2 - 3 பேருக்குப் போதுமானது 

தேவையான பொருட்கள் 

  • சீரகம் - 25 கிராம் 
  • மஞ்சள் - 1 துண்டு 
  • மிளகு - 10
  • வேர்க்கொம்பு - 1 துண்டு 
  • உள்ளி - 3 பல்லு 
  • பழப்புளி - பாக்களவு 
  • உப்பு - அளவிற்கு 
  • முட்டை - 2 அல்லது அவித்த சுறாமீன் 04 துண்டு 
  • நல்லெண்ணெய் - 2 மே.க 
  • தண்ணீர் - 2 தம்ளர் 

செய்முறை 

  1. அம்மியைத் துப்பரவு செய்து வேர்க்கொம்பு, மஞ்சள் என்பவற்றை நொருக்கி அரைத்த பின் உள்ளி, மிளகு, சீரகம் என்பவற்றைச் சேர்த்து சிறிதளவு தண்ணீரும் விட்டு பசுந்தையாக அரைத்தெடுத்துக் கொள்க.

  2. அரைத்த கூட்டைத் தாச்சியிலிட்டு 2 தம்ளர் தண்ணீரில் கரைத்த பழப்புளிக் கரைசலை விட்டு நன்கு கரைத்து அடுப்பில் வைத்துப்பொங்கிக் கொதிக்கும் வரை காய்ச்சி, அளவிற்கு உப்பு சேர்த்து முட்டையை உடைத்துவிட்டு, முட்டை அவிந்து வரும் நிலையில் நல்லெண்ணெய் சேர்த்து இறக்கி சூட்டுடனேயே பரிமாறலாம். 

குறிப்பு 

  • வேர்க்கொம்பு, மஞ்சள், மிளகு, சீரகத்தூள்கள் இருப்பின் கிரைண்டரில் இட்டு அளவிற்குத் தண்ணீர் சேர்த்து அரைத்து மேற்கூறிய முறையில் தயாரித்துக் கொள்ளலாம்.   

Post a Comment

0 Comments