Cabbage soup Recipe - முட்டைக்கோஸ் சூப் செய்முறை


முட்டைக்கோஸ் சூப் எளிமையாக வீட்டில் செய்வது எப்படி? செய்முறை தமிழில். வயிறு கோளாறு இருப்பவர்கள் முட்டைக்கோஸை உணவில் சேர்த்து கொள்வது சிறந்தது. 

தேவையான பொருட்கள் 

  • முட்டைக் கோஸ் - 200 கிராம் 
  • இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன் 
  • எலுமிச்சைசாறு - 1/2 டீஸ்பூன் 
  • பெப்பர், உப்பு - தேவையான அளவு 
  • ரஸ்க் தூள் - சிறிதளவு 

செய்முறை 

  1. முட்டைக் கோஸை வேக வைத்து மிக்சியில் போட்டு அரைத்து வையுங்கள். 

  2. இந்தக் கலவையில் இஞ்சி பூண்டு விழுது, பெப்பர், உப்பு சேர்த்து தேவையான நீர் விட்டு கொதிக்க விடுங்கள். 

  3. கொதி வந்ததும் இறக்கி எலுமிச்சை சாறு சேர்த்து ரஸ்க் தூளை மேலே தூவிப் பரிமாறுங்கள்.

  4. மலச்சிக்கலுக்கு நல்ல மருந்து இந்த சூப்.  

Post a Comment

0 Comments