Sprout Soup Recipe - முளைகட்டிய பயறு சூப்


முளைகட்டிய பாசிப்பயறில் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம். செய்முறை தமிழில். பெற்றுக்கொள்ளுங்கள். முளைகட்டிய பாசிப்பயறில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது இது  உடலுக்கு ஆரோக்கியமானது 

 தேவையான பொருட்கள் 

  • எதாவது ஒரு முளைகட்டிய பயறு - 100 கிராம் 
  • வெங்காயம் - 2
  • தக்காளி - 2
  • இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன் 
  • மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன் 
  • எண்ணெய் - தேவையான அளவு 
  • உப்பு - தேவையான அளவு 

செய்முறை 

  1. முளைகட்டிய பயறை வேகவைத்து மிக்சியில் அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். 

  2. வெங்காயம், தக்காளியையும் அரைத்து தனியாக வையுங்கள்.

  3. எண்ணெயைக் காயவைத்து அதில் வெங்காயம் தக்காளி விழுது, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்குங்கள்.

  4. அரைத்த பயறை இதில் சேர்த்து தேவையான நீர்விட்டு கொதிக்க வையுங்கள். 

  5. இறக்கும் போது மிளகுத்தூள், உப்பு சேர்த்து கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறுங்கள்.  

Post a Comment

0 Comments