Pepper Rasam Recipe - மிளகுரசம் செய்முறை


மிளகுரசம் செய்வது எப்படி. ரெசிபி தமிழில்! இது அஜீரணத்திற்கு மற்றும் சளிக்கு மிகவும் உகந்த உணவாகும். இப்பொழுது கீழே மிளகு ரசம் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்

 மிளகுரசம் 

5 பேருக்கு போதுமான சுவையான மிளகுரசம்

  • மிளகு - 1 தே.க (நிரப்பி)
  • மல்லி - 2 மே.க (நிரப்பி)
  • நற்சீரகம் - 1 தே.க (நிரப்பி)
  • செத்தல் மிளகாய் - 1
  • உள்ளி - 8 பல்லு 
  • பழப்புளி - ஒரு பாக்களவு ( விதை நீக்கியது)
  • பெருங்காயம் - ஒரு குண்டுமணியளவு 
  • உப்பு - அளவிற்கு
  • தண்ணீர் - 4 தம்ளர் 
  • தேங்காய்ப்பூ - 3 மே.க 

செய்முறை 

  1. தேங்காய்ப்பூவில் ஒரு தம்ளர் தண்ணீர் விட்டுப் பால் பிழிந்து கொள்க.

  2. ஒரு தம்ளர் தண்ணீரில் பழப்புளியைக் கரைத்து வைத்து கொள்ளவும்.

  3. மல்லி, சீரகம், மிளகாய், உள்ளி என்பவற்றை உரலிலிட்டு நன்றாக இடித்தெடுத்துக் கொள்க.

  4. பின்பு இடித்த கலவையைப் பாத்திரத்திலிட்டு, தேங்காய்ப்பால், பழப்புளிக் கரைசல், 2தம்ளர் தண்ணீர் என்பவற்றை விட்டுக் கரைத்து அளவிற்கு உப்பும் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். ரசம் பொங்கிக் கொதித்ததும் அப்பாத்திரத்தின் மூடியில் பெருங்காயத்தை உரைத்து அம் மூடியால் பாத்திரத்தை இறுகமூடிச் சிறிது நேரம் வைத்தபின்பு இறுக்கிக் கரண்டியால் நன்றாகக் கலக்கிக் கொண்ட பின்பு வடித்தெடுத்துப் பரிமாறலாம்.    

  

Post a Comment

0 Comments