Mutton Rolls Recipe - மட்டன் ரோல்ஸ் செய்வது எப்படி?


காரமான மற்றும் சுவையான  மட்டன் ரோல் செய்வது எப்படி? செய்முறை தமிழில் கீழே பெற்றுக்கொள்ளுங்கள். இந்த சுவையான மட்டன் ரோல் ரெசிபியை தயாரித்து உங்கள் விருந்தினர்களை அசத்துங்கள்.


15 - 17 மட்டன் றோல்ஸ் 

தேவையான பொருட்கள் 

மாப்பசை 

  • கோதுமை மா - 250 கிராம் 
  • மாஜரின் - 1 மே .க (நிரப்பி)
  • உப்பு - அளவிற்கு 
  • தண்ணீர் - அளவிற்கு 

மாக்கரைசல் 

  • கோதுமை மா - 2 மே.க (நிரப்பி)
  • உப்பு நீர் - அளவிற்கு 
  • தண்ணீர் - அளவிற்கு 

கறி 

  • உருளைக்கிழங்கு - 250 கிலோகிராம் 
  • இறைச்சி - 250 கிலோகிராம் (எலும்பில்லாதது)
  • சி.வெட்டிய வெங்காயம் - 2 மே.க (நிரப்பி)
  • சி.வெட்டிய பச்சைமிளகாய் - 1 மே.க (நிரப்பி)
  • தனி மிளகாய்த்தூள் - 1 தே.க (நிரப்பி)
  • மிளகுத்தூள் - 1 தே.க (மட்டாக)
  • கடுகு - 1 தே.க (நிரப்பி)
  • ஏலப்பொடி / மசாலாத்தூள் - 1 தே.க (மட்டாக)
  • சி. வெட்டிய உள்ளி - 1 தே .க (மட்டாக)
  • தேங்காய்ப்பால் (முதல்பால்) - 3 மே.க
  • தேங்காயெண்ணெய் - 1/4 போத்தல் 
  • றக்ஸ்தூள் - 3 மே.க (நிரப்பி)
  • உப்புத்தூள் - அளவிற்கு 
  • தேசிப்புளி - 1 தே.க 
  • வெட்டிய கறிவேப்பிலை - 1 மே.க 
  • கோதுமை மாவு - 2 மே,க (நிரப்பி) பலகைக்குப் பூசுவதற்கு 

செய்முறை 

  1. இறைச்சியைப் பாத்திரத்திலிட்டு உப்பும் அளவாக நீரும் சேர்த்து அவித்தெடுத்து கிரைண்டரில் போட்டு அரைத்தெடுக்கவும். (கிரைண்டரில் போடுவதற்கு முன் இறைச்சியைத் துண்டுகளாக வெட்டிய பின்பே போடுதல் வேண்டும். கிரைண்டர் இல்லாவிடின் இறைச்சியைச் சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.)

  2. உருளைக்கிழங்கை அவித்தெடுத்து தோல் நீக்கிச் சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.

  3. பின்பு தாச்சியில் இரண்டு மே.க தேங்காயெண்ணையைக் காயவைத்து கடுகையிட்டு வெடிக்க வைத்துச் சிறிதாக வெட்டிய வெங்காயம், பச்சை மிளகாய் என்பவற்றையிட்டு வதங்கவிட்டு வதங்கியபின் கறிவேப்பிலை, உள்ளி என்பவற்றைச் சேர்த்துக் கொள்ளவும்.

  4. பின்பு இதனுள் இறைச்சியையிட்டு நன்றாகச் சேர்த்துக் கொண்டபின் மிளகாய்த்தூள், உப்புத்தூள், ஏலப்பொடி, இறைச்சித்தூள், மிளகுத்தூள் என்பவற்றையுமிட்டு சேர்த்து சிறிது நேரம் மூடி அவியவிடவும். பின்பு வெட்டிய உருளைக்கிழங்கு, பால் என்பவற்றையும் சேர்த்து அவியவிட்டுக் கறி இறுக்கமாக திரளத் தொடங்கியதும் இறக்கித் தேசிப்புளி சேர்த்துக் கொள்க.

  5. கறி ஆறிய பின்பு தேசிப்பழம் அளவு உருண்டைகளாக பிடித்து உள்ளங்கையில் வைத்து நான்கு விரல்களாலும் அமத்தி ஒரு நீள் வடிவ உருளையாக ஆக்கிக் கொள்க. (அண்ணளவாக ஒரு ஆட்க்காட்டி விரலளவு நீளமாக இருக்க வேண்டும்.)

மாப்பசை தயாரிப்பு :

  1. பாத்திரத்தில் மாவை அரித்துப் போட்டுக் கொண்ட பின்பு மஜாரினும் உப்பு நீரும் சேர்த்து விரல்களால் தூவித்தூவி நன்கு சேர்த்து அளவாக நீர்விட்டுக் கையில் ஒட்டாத பதத்திற்கு அடித்துக் குழைத்து மென்மையாகப் பந்து போல் ஆக்கி இதைப் 15 சம உருண்டைகளாக பிரித்து வைத்துக் கொள்க.

மாக்கரைசல் தயாரிப்பு : 

  1. 2 மே.க கோதுமை மாவைப் பாத்திரத்திலிட்டு உப்பு நீரும், அளவாகத் தண்ணீரும் விட்டுக் கூழ்ப் பதமாகக் கரைத்து வைத்துக் கொள்க.

  2. பின்பு குழைத்து வைத்துள்ள மாப்பசை உருண்டைகளை எடுத்து மாப்பூசிய பலகையில் வைத்து உருளையால் மிக மெல்லியதாக உருட்டி 4'' X 4'' அளவுடைய ஓர் சதுரத் துண்டாக வெட்டியெடுத்து அதன் ஒரு விளிம்புக்கரை ஓரமாக உருளையாகப் பிடித்து வைத்துள்ள கறியை வைத்து மேல் இரு விளிம்புகளையும் கறியை மூடும் வண்ணம் மடித்துக் கொண்டபின் மறு விளிம்போரம் சிறிதளவு நீரைப் பூசி கறிவைத்த விளிம்பும் புறமிருந்து பாய்போலச் சுற்றிக் கொள்க. (விளிம்போரம் நீர் பூசுவதால் வாய் பிளந்து கொள்ளாது)

  3. பின்பு கூழ்ப்பதமாக கரைத்த மாக்கரைசலில் தோய்த்து ரஸ்க்தூளில் புரட்டி கொதிக்கும் எண்ணெயிலிட்டுப் பொரித்தெடுத்துப் பரிமாறலாம்.

குறிப்பு 

  • இறைச்சி சேர்க்க விரும்பாவிடில் 500 கிராம் உருளைக்கிழங்கில் கறி தயாரித்துக் கொள்க.
  • மாக்கரைசலில் தோய்ப்பதற்குப் பதிலாக அடித்த முட்டையில் தோய்த்து ரஸ்க்தூளில் புரட்டலாம்.       

            

 

Post a Comment

0 Comments