Mutton Soup Recipe - மட்டன் சூப் இலகுவாக செய்வது எப்படி?


சுவையான மட்டன் சூப் வீட்டில் இலகுவாக செய்வது எப்படி?குழந்தைகளும் பெரியவர்களும் விரும்பி சாப்பிடக்கூடிய மட்டன் சூப் ரெசிபி தமிழில்.

 தேவையான பொருட்கள் 

  • மட்டன் (மார்கண்டம்) - 250 கிராம் 
  • மிளகு - 4
  • வெங்காயம் - 1/2 அவிந்தது 
  • தக்காளி - 2
  • அரிசி - 1 கைப்பிடி 
  • காய்ந்த மிளகாய் - 2
  • இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி 
  • மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் 
  • உப்பு - தேவையான அளவு 
  • பெருங்காயம் , பெருங்காயம் - தாளிக்க 

செய்முறை 

  1. மட்டனை சுத்தம் செய்து அதனுடன் வெங்காயம், தக்காளி, அரிசி, காய்ந்த மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் தேவையான நீர் விட்டு வேக வைத்துக் கொள்ளுங்கள்.

  2. வெந்ததும் நீரை வடித்துத் தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

  3. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, லவங்கம், பெருங்காயம், கருவேப்பிலை போட்டுத் தாளித்து, தனியே வடித்து வைத்திருக்கும் நீரை இதில் கொட்டி, கொதிக்க விட்டு இறக்குங்கள். 

  4. அவ்வளவு தான் மட்டன் சூப் ரெடி     

Post a Comment

0 Comments