Maravalli kizhangu Vadai Recipe - மரவள்ளி வடை


உளுந்து வடை, பருப்புவடை வரிசையில் புதிதாக மரவள்ளிக் கிழங்கு வடை செய்முறை பற்றி அறிந்து கொள்ளுங்கள். சுவையான மரவள்ளி கிழங்கு செய்முறை தமிழில். 

15 வடை 

தேவையான பொருட்கள் 

  • மரவள்ளிக்கிழங்கு - 500 கிராம் 
  • கோதுமை மாவு - 1 மே.க (நிரப்பி)
  • சிறிதாக வெட்டிய வெங்காயம் - 2 மே.க (நிரப்பி)
  • சிறிதாக வெட்டிய பச்சைமிளகாய் - 2 மே.க (நிரப்பி)
  • தனி மிளகாய்த் தூள் - 1 தே.க (நிரப்பி)
  • உப்புத்தூள் - அளவிற்கு 
  • தேங்காயெண்ணெய் - 1/4 போத்தல் 

செய்முறை 

  1. மரவள்ளிக்கிழங்கை தோலுரித்து கழுவி ஸ்கிரேப்பரில் துருவி எடுத்துக் கொள்க.

  2. இத்துருவலைப் பாத்திரத்திலிட்டு அரித்த கோதுமை மாவு, வெட்டிய வெங்காயம், பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், உப்புத்தூள் என்பவற்றைப் போட்டு நன்கு பிசைந்து குழைத்துக் கொள்க.

  3. தாச்சியில் எண்ணெயைக் கொதிக்க வைத்து குழைத்து வைத்துள்ள கலவையைத் தேசிப்பழமளவு உருண்டைகளாகப் பிடித்து உள்ளங்கையில் வைத்து மெதுவாக அமர்த்திய பின் எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுத்துக் கொள்க.

  4. இவ் வடைகளைச் சூடாகப் பரிமாறும்போது அதிக சுவையாக இருக்கும்.    

Post a Comment

0 Comments