Mushroom Soup Recipe - மஷ்ரூம் சூப் செய்வது எப்படி?


காளான் சூப்பை எப்படி எளிமையான முறையில் செய்வது? செய்முறையை தமிழில் கீழே பெற்றுக்கொள்ளுங்கள். அவ்வப்போது காளான் சூப் பருகுவதன் மூலம் பெண்களுக்கு கருப்பைப் பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும். இப்போது காளான் சூப் எப்படி செய்வது என்று பார்க்கலாம். 

தேவையான பொருட்கள் 

  • மஷ்ரூம் - 250 கிராம் 
  • எலுமிச்சை - 1 (சாறு பிழியவும்)
  • கரம் மசாலா - 1/2 டீஸ்பூன் 
  • வெங்காயம் - 1 (அரியவும்)
  • நெய் - 2 டீஸ்பூன் 
  • அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன் 
  • மிளகுத்தூள் - தேவையான அளவு 
  • உப்பு - தேவையான அளவு 

செய்முறை 

  1. மஷ்ரூமை கழுவி மேலே இருக்கும் தோலை நீக்கி சிறிதாக வெட்டிக் கொள்ளுங்கள்.

  2. வெட்டியதை எலுமிச்சைச் சாறில் ஊறவையுங்கள்.

  3. வெங்காயத்தை நெய்யில் போட்டு வதக்கி, அதில் ஊறவைத்த மஷ்ரூம், கரம்மசாலா சேர்த்து வதக்குங்கள். 

  4. வதங்கியவுடன் தேவையான தண்ணீர் (சூப்பிற்குத் தகுந்தபடி) சேர்த்து வேக வையுங்கள்.
     
  5. வெந்ததும் அரிசி மாவை நீரில் கரைத்து இதில் ஊற்றிக் கொதிக்க விடுங்கள். 

  6. ஒரு கொதி வந்ததும் இறக்கி மிளகுத்தூள், உப்பு சேர்த்து பரிமாறுங்கள்.   

Post a Comment

0 Comments