Liver soup Recipe - லிவர் சூப் செய்முறை தமிழில்


லிவர் சூப் இலகுவாக வீட்டிலேயே செய்வது எப்படி? செய்முறை தமிழில். ஆரோக்கியமான ஓர் லிவர்  சூப் ரெசிபியை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், இந்த சூப்பை ரெசிபியை முயற்சிக்கவும். 

தேவையான பொருட்கள் 

  • ஈரல் - 50 கிராம் 
  • தக்காளி - 2
  • பூண்டு - 4 பல் 
  • மிளகு - 2
  • வெங்காயம் -1/4
  • மஞ்சள் தூள் - சிட்டிகையளவு 
  • தனியா தூள் - 1/4 டீஸ்பூன் 
  • உப்பு - தேவையான அளவு 
  • கடுகு, கறிவேப்பிலை, எண்ணெய் - தாளிக்க 

செய்முறை 

  1. ஈரலை சுத்தம் செய்து, சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்.

  2. தக்காளி, பூண்டு,மிளகு, வெங்காயம் நான்கையும் மிக்சியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளுங்கள்.

  3. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொள்ளுங்கள்.

  4. அரைத்து வைத்திருக்கும் கலவையை இதில் கொட்டி வதக்குங்கள். 

  5. சிறிது நேரம் வதங்கியதும் ஈரல், மஞ்சள் தூள், தனியா தூள் உப்பு சேர்த்து வதக்குங்கள். 

  6. ஓரளவு வெந்து வந்தவுடன் சூப்பின் அளவிற்கு நீரை விட்டு கொதிக்க வைத்து இறக்கிப் பரிமாறுங்கள்.

Post a Comment

0 Comments