Greenish Soup Recipe - கிரீன்ஸ் சூப் செய்முறை


க்ரீனிஷ் சூப் சுவையாக வீட்டில் செய்வது எப்படி? சுவை அரும்புகளுக்கு விருந்தளிக்கும் இந்த சுவையான க்ரீனிஷ் சூப்பை இன்றே வீட்டில் முயற்சி செய்யுங்கள். முழுமையான செய்முறை கீழே தமிழில் பெற்றுக்கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள் 

  • மணத்தக்காளி கீரை - 1 கட்டு 
  • வெங்காயம் - 1
  • தக்காளி - 1
  • மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன் 
  • புளி - ஒரு கோழி உருண்டை அளவு 
  • துவரம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் 
  • மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் 
  • அரிசி மாவு - 1/4
  • உப்பு - தேவையான அளவு 

செய்முறை 

  1. மணத்தக்காளி கீரையை சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

  2. துவரம் பருப்புடன் சுத்தம் செய்த மணத்தக்காளி கீரை, தக்காளி, அரிந்த வெங்காயம், புளி, மிளகுத்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக வைத்து மசியுங்கள்.

  3. மசித்த கீரையில் தேவையான அளவு தண்ணீர்விட்டுக் கொதிக்க வையுங்கள்.

  4. அரிசிமாவை நீரில் கரைத்து இதில் ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கி பரிமாறுங்கள்.

  5. பரிமாறும்போது தேவைப்பட்டால் உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளலாம்.

  6. பொரித்த பிரட்டைப் போட்டும் அலங்கரிக்கலாம்.  

Post a Comment

0 Comments