Corn Soup recipe - கார்ன் சூப் செய்முறை


கார்ன் சூப் எளிமையாக வீட்டில் செய்வது எப்படி? சுவையான மற்றும் புத்துணர்ச்சி ஊட்டக்கூடிய இந்த கார்ன் சூப்பை இன்றே வீட்டில் தயாரித்து சுவைத்து மகிழுங்கள். முழுமையான செய்முறை கீழே தமிழில். 

தேவையான பொருட்கள் 

  • மக்காச் சோளக் கதிர் - 1
  • பாசிப் பயறு - 1 கைப்பிடி 
  • மைதா - 1 டேபிள் ஸ்பூன் 
  • தக்காளி - 1
  •  வெங்காயம் - 1/2
  • பட்டை, லவங்கம் - தலா 2(பொடிக்கவும்)
  • மிளகுத்தூள் - தேவையான அளவு 
  • உப்பு - தேவையான அளவு 
  • எண்ணெய் - தாளிக்க 

செய்முறை 

  1. பாசிப்பயறுடன் மக்காச் சோளத்தை சேர்த்து வேக வைத்துக் கொள்ளுங்கள்.

  2. வெந்ததும் தண்ணீரை வடித்துக் கொண்டு சோளத்தை உரித்து பாசிப்பயறுடன் சேர்த்து மிஸ்சியில் மைய அரைத்துக் கொள்ளுங்கள்.

  3. அரைத்ததை வடித்த தண்ணீருடன் சேர்த்து தனியாக வையுங்கள்.

  4. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, லவங்கம் போட்டு தாளித்துக் கொள்ளுங்கள். 

  5. வெங்காயம், தக்காளியை மிஸ்சியில் அரைத்து இதில் சேர்த்துக் கொதிக்க வையுங்கள். 

  6. ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் மக்காச் சோளம், பாசிப்பயறு கலவையை இதில் ஊற்றி தேவையான தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடுங்கள். 

  7. ஒரு கொதி வந்ததும் அடுப்பிலிருந்து இறக்குங்கள்.

  8. பரிமாறும்போது உப்பு, மிளகுத்தூள் சேர்த்து சூடாக பரிமாறுங்கள்.   

Post a Comment

0 Comments