Tasty Cutlet Recipe - சுவையான கட்லெட் ரெசிபி


கட்லட் செய்வது இவ்வளவு ஈஸியா! விரைவான மற்றும் சுவையான கட்லட் ரெசிபி இதோ தமிழில். ரின் மீனை பயன்படுத்தி ஓர் சுவையான மற்றும் கிரிஸ்பியான கட்லட்டை இன்றே வீட்டில் தயாரியுங்கள். 

12 கட்லெட் 

தேவையான பொருட்கள் 

  • சிறிய ரின் மீன் - 1 (155 கிராம்)
  • உருளைக்கிழங்கு - 150 கிராம் 
  • சிறிதாக வெட்டிய வெங்காயம் - 1 மே.க (நிரப்பி)
  • சிறிதாக வெட்டிய பச்சைமிளகாய் - 1 மே.க (நிரப்பி)
  • சிறிதாக வெட்டிய கறிவேப்பிலை - 1 மே.க (நிரப்பி)
  • சிறிதாக வெட்டிய உள்ளி - 1 தே.க (நிரப்பி)
  • மிளகு தூள் - அளவிற்கு 
  • தேசிப்புளி - 1 தே.க 
  • உப்புத்தூள் - அளவிற்கு 
  • ரஸ்க் தூள் - 3 தே.க (நிரப்பி)
  • முட்டை - 1
  • தேங்காயெண்ணை - 1/4 போத்தல் 

செய்முறை 

  1. உருளைக்கிழங்கை அவித்துத் தோலுரித்து சிறு துண்டுகளாக வெட்டி ஒரு பாத்திரத்திலிட்டு கட்டியில்லாமல் மசித்துக் கொள்க.

  2. பின்பு மசித்த கிழங்கினுள் ரின் மீன், வெங்காயம், பச்சைமிளகாய், உள்ளி, கறிவேப்பிலை, உப்புத்தூள், மிளகுத்தூள் என்பவற்றைப் போட்டு நன்கு கையால் பிசைந்து தேசிப்புளியும் விட்டுச் சேர்த்து கொண்டு 15 சம அளவான உருண்டைகளாக பிடித்துக் கொள்க.

  3. முட்டையை நன்கு நுரைபொங்க அடித்து ஒவ்வொரு உருண்டைகளாக எடுத்து முட்டை நுரையில் தோய்த்துக் கொண்டு ரஸ்க் தூளில் அவ் உருண்டைகளைப் புரட்டியெடுத்து உள்ளங்கையில் வைத்து மெதுவாக அமர்த்திய பின், நன்கு கொதித்த எண்ணெயில் போட்டுப் பொரியவிட்டு முள்ளுக் கரண்டியால் மெதுவாகத் தட்டி திருப்பி மறுபுறமும் வேக விட்டெடுத்து ஆறிய பின்பு பரிமாறலாம். 

குறிப்பு 

  • வெங்காயம், பச்சைமிளகாய், உள்ளி, கறிவேப்பிலை என்பவற்றை 1 தே.க எண்ணெயில் வதக்கியெடுத்தும் சேர்த்துக் கொள்ளலாம்.       


Post a Comment

0 Comments