Herbal Soup Recipe - மூலிகை சூப் தயாரிப்பது எப்படி?


மூலிகை சூப் தயாரிப்பது எப்படி என தமிழில் இங்கே காண்போம். இந்த சூப் உடல் சூடு மற்றும் நுண்ணுயிர்கள் எதிர்ப்பில் மிக சிறந்த பலன்களை கொடுக்கக்கூடியது.

 தேவையான பொருட்கள் 

  • சுக்கு - 2  டீஸ்பூன் 
  • மிளகு - 2 டீஸ்பூன் 
  • திப்பிலி - 2 டீஸ்பூன் 
  • எலுமிச்சை - 1/2
  • இஞ்சிப் பூண்டு விழுது -  1 டீஸ்பூன்
  • வேகவைத்த பருப்பு - 1/2 கப் 
  • மஞ்சள் தூள் - 1/4  டீஸ்பூன் 
  • அரிசி மாவு - 1  டீஸ்பூன் 
  • உப்பு - தேவையான அளவு 
  • கொத்தமல்லித் தழை - சிறிதளவு 

செய்முறை 

  1. வேகவைத்த பருப்பை மசித்துக் கொள்ளுங்கள். அதனுடன் சுக்கு, மிளகு, திப்பிலி, இஞ்சிப் பூண்டு விழுது, சீரகம், மஞ்சள் தூள் சேர்த்து தேவையான நீர் விட்டு கொதிக்க வையுங்கள்.

  2. கொதித்ததும் நீரையும் மட்டும் வடித்துக் கொள்ளுங்கள். இந்த நீரை மீண்டும் கொதிக்க விட்டு அரிசி மாவை நீரில் கரைத்து ஊற்றுங்கள்.

  3. ஒரு கொதி வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி எலுமிச்சை சாறு பிழிந்து கொத்தமல்லித் தழை தூவி பரிமாறுங்கள். 

Post a Comment

0 Comments