Diet Soup Recipe - டயட் சூப் செய்முறை


டயட் சூப் வீட்டில் தயாரிப்பது எப்படி? செய்முறை தமிழில். இந்த டயட் சூப் ஆரோக்கியத்தை விரும்பும்  உங்களுக்கு ஓர் பொருத்தமான ரெசிபியாகும்! இந்த குறைந்த கலோரி, அதிக நார்ச்சத்துள்ள சூப் ஆரோக்கியமானது மற்றும்  சுவையானது. 

தேவையான பொருட்கள் 

  • வாழைத்தண்டு - 1
  • பார்லி - 50 கிராம் 
  • தக்காளி - 1
  • இஞ்சி பூண்டு விழுது - 1 மே.க 
  • காய்ந்த மிளகாய் - 1 அல்லது 2
  • அரிசி - 1 கைப்பிடி 
  • பருப்பு - சிறிதளவு 
  • நெய் - 1/2 டீஸ்பூன் 
  • பெப்பர் , உப்பு - தேவையான அளவு 

செய்முறை 

  1. வாழைத்தண்டை நார் எடுத்து, சிறிதாக வெட்டிக் கொள்ளுங்கள். 

  2. வெட்டிய வாழைத்தண்டுடன் அரிசி, பருப்பு, பார்லி, தேவையான தண்ணீர் சேர்த்து வேகவைத்துக் கொள்ளுங்கள். 

  3. வெந்ததும் தண்ணீரை வடித்துக் கொள்ளுங்கள்.

  4. நெய்யில் காய்ந்த மிளகாய், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கிக் கொள்ளுங்கள். இதில் வடித்து வைத்திருக்கும் நீரை விட்டு நன்றாகக் கொதிக்க விடுங்கள்.
     
  5. கொதித்ததும் அடுப்பிலிருந்து இறக்கி தேவையான உப்பு, பெப்பரைச் சேர்த்து பரிமாறுங்கள். 

Post a Comment

0 Comments