Cream of Peas Soup - கிரீம் ஆப் பீஸ் சூப் செய்வது எப்படி ?




கிரீம் ஆப் பீஸ் சூப் அதாவது பச்சை பட்டாணியை பயன்படுத்தி ஓர் கிரீமியான சூப் எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருள்கள் மற்றும் ரெசிபியை தமிழில் இங்கு பெற்றுக்கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள் 

  • பச்சைப் பட்டாணி - 200 கிராம் 
  • வெங்காயம் - 1 (அரிந்தது)
  • தக்காளி - 1 (அரிந்தது)
  • இஞ்சி பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன் 
  • கான் பிளார் - 1 டேபிள் ஸ்பூன் 
  • நெய் - சிறிதளவு 
  • உப்பு, பெப்பர் - தேவையான அளவு 

செய்முறை 

  1. பச்சைப் பட்டாணியை தேவையான நீர்விட்டு வேக வையுங்கள். 

  2. வெந்ததும் வடித்துக் கொண்டு தண்ணீரை தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

  3. வெந்த பச்சைப் பட்டாணியுடன் தக்காளி, வெங்காயத்தை வதக்கிப் போட்டு மிக்சியில் அரைத்துக் கொள்ளுங்கள். 

  4. வடித்து வைத்திருக்கும் நீரில் இதைச் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இந்த நீரில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கொதிக்க விடுங்கள்.

  5. கான் பிளாரை நீரில் கரைத்து இதில் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்குங்கள்.

  6. பரிமாறும் போது உப்பு, பெப்பர் சேர்த்து சூடாக பரிமாறுங்கள்.

Post a Comment

0 Comments