Crab Soup Recipe - நண்டு சூப் செய்முறை தமிழில்


நண்டு சூப் எப்படி செய்வது என்று பார்க்கலாம். செய்முறை தமிழில் இதோ! சளி தொல்லையால் அவதிப்படுபவர்கள் இந்த நண்டு சூப்பை வாரம் இருமுறை குடித்தால் நிவாரணம் பெறலாம்.  

தேவையான பொருட்கள் 

  • நண்டு - 2
  • வெங்காயம் - 3
  • பச்சைமிளகாய் - 2
  • மிளகு - 4
  • தக்காளி - 2
  • பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன் 
  • மைதா - 1 டீஸ்பூன் 
  • கறிவேப்பிலை - சிறிதளவு 
  • உப்பு - தேவையான அளவு 

செய்முறை 

  1. நண்டின் கால்களை ஒடித்து அதன் மேல் பகுதியில் ஒரு தட்டு தட்டி மஞ்சள் தூள் போட்டு கழுவிக் கொள்ளுங்கள்.

  2. வெங்காயம், பச்சைமிளகாய், மிளகு, தக்காளியை வதக்கி மிக்சியில் அரைத்துக் கொள்ளுங்கள்.

  3. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு தாளியுங்கள். இதில் தக்காளி , வெங்காயக் கலவையை போட்டு வதக்குங்கள்.

  4. வதக்கியதும் அதில் நண்டைப் போட்டு தேவையான நீர் விட்டு வேக வையுங்கள்.

  5. வெந்ததும் நண்டை தனியே எடுத்து விடுங்கள். மைதாவை நீரில் கரைத்து கொதிக்கும் கலவையில் ஊற்றுங்கள்.

  6. கலவை ஒரு கொதி வந்ததும் இறக்கி சூடாக பரிமாறுங்கள்.

   

Post a Comment

0 Comments