Chicken Soup Recipe - சிக்கன் சூப் செய்வது எப்படி?


குளிருக்கு இதமான ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சிக்கன் சூப் செய்வது எப்படி தெரியுமா? சிக்கன் சூப் இலகுவாக வீட்டிலேயே செய்யலாம். செய்முறை தமிழில். இன்றே இந்த சூப்பை உங்கள் வீட்டில் முயற்சியுங்கள். 

தேவையான பொருட்கள் 

  • சிக்கன் - 1 கிலோ 
  • இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன் 
  • அஜினமோட்டோ - சிட்டிகையளவு 
  • உப்பு , பெப்பர் - தேவையான அளவு 

செய்முறை 

  1. சிக்கனில் தண்ணீர் விட்டு வேகவைத்துக் கொள்ளுங்கள்.

  2. வெந்ததும் தண்ணீரை வடித்து தனியாக வையுங்கள்.

  3. இந்த நீரில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொதிக்க வைத்து, கொதித்ததும் அஜினமோட்டோ சேர்த்து இறக்குங்கள்.

  4. சிறிதளவு வேக வைத்த சிக்கனை எடுத்து துண்டுகளாக்கி சூப்பில் சேருங்கள்.

  5. பரிமாறும்போது உப்பு, பெப்பர் சேர்த்து பரிமாறுங்கள். 

  6. பிரைட் ரைஸ், சிக்கன் வறுவல் செய்ய வேகவைத்திருக்கும் சிக்கனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments