Beetroot pepper soup Recipe - பீட்ரூட் பெப்பர் சூப்


பீட்ரூட் பெப்பர் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம். செய்முறையை தமிழில் பெற்றுக்கொள்ளுங்கள். பீட்ரூட்டை பொரியலாகவோ, கூட்டாகவோ சாப்பிடப் பிடிக்காதவர்கள் இந்த சூப்பை தயாரித்து அருந்தலாம். 

தேவையான பொருட்கள் 

  • பீட்ரூட் - 1/4 கிலோ 
  • எலுமிச்சை - 1/2 
  • வெங்காயம் - 1
  • தக்காளி - 1
  • வெங்காயம் - 1
  • வெண்ணெய் - 2 டீஸ்பூன் 
  • இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன் 
  • கான் ப்ளார் - 1 டீஸ்பூன் 
  • பட்டை, லவங்கம் - 1 டீஸ்பூன் (பொடித்தது)
  • உப்பு - தேவையான அளவு 
  • மிளகுத்தூள் - தேவையான அளவு 

செய்முறை 

  1. பீட்ரூட்டை தோல் சீவி, சிறிது சிறிதாக வெட்டிக் கொள்ளுங்கள்.

  2. வெங்காயம், தக்காளியை மிக்சியில் அரைத்துக் கொள்ளுங்கள்.

  3. வெண்ணெயை ஒரு வாணலியில் போட்டு உருக்கிக் கொண்டு பட்டை, லவங்கம் தாளியுங்கள். இதில் அரைத்த தக்காளி, வெங்காயத்தை போட்டு வதக்கிக் கொள்ளுங்கள்.

  4. அடுத்து இஞ்சிப் பூண்டு விழுது, பீட்ரூட் போட்டு வதக்கி சூப்பிற்கு தேவையான நீர் விட்டு குக்கரில் வேக வையுங்கள்.

  5. வெந்ததும் இறக்கி எலுமிச்சை சாறு பிழிந்து உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறுங்கள்.     


Post a Comment

0 Comments