Aviyal Porridge Recipe - அவியல்க் கஞ்சி செய்வது எப்படி?


அவியல் கஞ்சி செய்வது எப்படி? செய்முறை தமிழில். முற்றிலும் காய்கறி கொண்டு இது தயார் செய்யப்படுவதால் இது உடலுக்கு சக்தியை தரும் ஒரு உணவு வகை ஆகும். இப்போது சுவையான அவியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 3 - 4 பேருக்கு போதுமானது 

தேவையான பொருட்கள் 

  • புழுங்கலரிசி - 1 சுண்டு 
  • தேங்காய் - பாதி 
  • பச்சைமிளகாய் - 15
  • வெங்காயம் - 15
  • கறிவேப்பிலை - 2 நெட்டு 
  • தண்ணீர் - 3 1/2 போத்தல் 
  • மஞ்சள்த்தூள் - 1 தே.க (மட்டாக)
  • தேசிப்பழம் - 2
  • உப்பு - அளவிற்கு 

செய்முறை 

  1. தேங்காயைத் துருவி இரண்டு தம்ளர் தண்ணீரை சிறிது சிறிதாக விட்டு பாலைப் பிழிந்து எடுத்துக் கொள்க.

  2. வெங்காயம் மிளகாயைத் துப்பரவாக்கி ஈர்க்கில் மாறிமாறிக் கோர்த்து வைத்துக் கொள்க.

  3. பாத்திரத்தில் 3 போத்தல் தண்ணீரை விட்டுக் கொதிக்க வைத்துக் கொதித்த பின்பு, அரிசியைக் கழுவிப்போட்டு அவியவிடவும். அரிசி அரைப்பதமாக அவிந்தவுடன் வெங்காயம், மிளகாய் கோர்த்து வைத்துள்ள ஈர்க்கையும் கறிவேப்பிலை நெட்டையுமிட்டு மூடி அவிய விடவும்.

  4. அரிசி நன்றாக அவிந்ததும் ஈர்க்கில் கோர்த்து வைத்துள்ள வெங்காயம், மிளகாயை எடுத்து ஈர்க்கை நீக்கிவிட்டுப் பிறிதொரு பாத்திரத்திலிட்டு நன்றாக மசித்துக் கொண்டபின்பு அக்கலவையை அவிந்து கொண்டிருக்கும் அரிசியினுள் விட்டு தேங்காய்ப்பால், அளவிற்கு உப்பு, மஞ்சள்தூள் என்பவற்றையும் சேர்த்து, நன்கு துளாவிக் காய்ச்சி இறக்கிக் கறிவேப்பிலை நெட்டை நீக்கிய பின்பு, தேசிப்புளியும் விட்டுச் சேர்த்துச் சூட்டுடனேயே பரிமாறினால் அதிக சுவையாக இருக்கும்.    

   

Post a Comment

0 Comments