Lamb Soup Recipe - ஆட்டுக்கால் சூப் செய்வது எப்படி?


சுவையான ஆட்டுக்கால் சூப் செய்வது எப்படி? ரெசிபி தமிழில். சளி இருமலை குணப்படுத்தும் ஆட்டுக்கால் சூப், உடம்புக்கு, எலும்புக்கு வலிமையை கொடுக்கிறது 

தேவையான பொருட்கள் 

  • ஆட்டுக்கால் - 4
  • இஞ்சி பூண்டு விழுது - 4 டேபிள் ஸ்பூன் 
  • மிளகாய்த்தூள் அல்லது மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன் 
  • மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன் 
  • பட்டை, லவங்கம் - தலா 2 (பொடிக்கவும்)
  • சோம்பு - 1/4 டீஸ்பூன் 
  • தக்காளி - 1
  • உப்பு - தேவையான அளவு 
  • கருவேப்பிலை - ஒரு கொத்து 
  • கொத்தமல்லித்தழை - அலங்கரிக்க 

செய்முறை 

  1. ஆட்டுக்காலை கடையில் வாங்கும்போது தீய்ச்சிதான் தருவார்கள். வாங்கிய ஆட்டுக்காலை ஒரு கத்தியில் அதிலுள்ள முடிகளெல்லாம் சுத்தமாகப் போகும் வரை சுரண்டி எடுங்கள்.

  2. சுத்தம் செய்த ஆட்டுக்காலை ஊற வையுங்கள்.

  3. தக்காளி, வெங்காயத்தை மிக்சியில் மைய அரைத்தெடுத்துக் கொள்ளுங்கள். 

  4. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கருவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.

  5. அடுத்து அரைத்த வெங்காயம், தக்காளி விழுதை இதில் போட்டு வதக்குங்கள். கூடவே இதில் மிளகுத்தூள், மஞ்சள் தூள், உப்பு, சோம்பு, இஞ்சி பூண்டு விழுது போட்டுக் கொதிக்க வையுங்கள்.

  6. பச்சை வாசனை போனதும் ஊற வைத்த ஆட்டுக்காலை இதில் போடுங்கள்.

  7. நான்கு அல்லது ஐந்து கப் தண்ணீர் விட்டு குக்கரில் வேக வையுங்கள்.

  8. வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி, வடிக்கட்டும் தட்டை வைத்து வடிகட்டுங்கள்.

  9. எண்ணெயில் பட்டை, லவங்கம் தாளித்து வடிகட்டிய சூப்பில் கொட்டுங்கள். 

  10. சூப்பைப் பரிமாறும்போது கொத்தமல்லித்தழை தூவி, விரும்பினால் வடிகட்டி வைத்திருக்கும் ஆட்டுக்கால் போட்டும் கொடுக்கலாம். 

Post a Comment

0 Comments