Varagu Dry Fruits Kozhukattai Recipe - வரகு, டிரை ப்ரூட்ஸ் கொழுக்கட்டை


வரகு, டிரை ப்ரூட்ஸ் கொழுக்கட்டை  ரெசிபி தமிழில். இந்த பாரம்பரிய கொழுக்கட்டை செய்முறையை வீட்டிலேயே தயாரிக்க படிப்படியான வழிமுறைகளைப் பகிர்ந்துள்ளோம்.

 தேவையான பொருட்கள் 

  • வரகரிசி மாவு - 1 கப் 
  • நாட்டுச் சர்க்கரை - 1/2 கப் 
  • வால்நாட் - 1/2 கப் 
  • முந்திரி - 1/2 கப் 
  • பாதாம் - 1/2 கப் (பொடித்தது)
  • பேரீச்சை, உலர்திராட்சை - மொத்தம் 20 (தலா 10)
  • நெய்யில் வறுத்த தேங்காயத் துருவல் - 1/2 கப் 
  • உப்பு - 1 சிட்டிகை 
  • நெய் - தேவைக்கு 

செய்முறை 

  1. விதை நீங்கிய பேரிச்சம்பழம், திராட்சை இரண்டையும் வேகவைத்து அரைக்கவும்.

  2. இத்துடன் பொடித்த நட்ஸ், தேங்காய்த் துருவல், நெய் சேர்த்துப் பூரணமாகக் கிளறவும்.

  3. இரண்டு கப் தண்ணீரில் உப்பு சேர்த்துக் கொதிக்கவிட்டு வரகரிசி மாவைப் போட்டு ஒரு ஸ்பூன் நெய்யை விட்டு சப்பாத்தி மாவு பதத்தில், கட்டியில்லாமல் கிளறவும்.

  4. இதை திரட்டி பூரணத்தை வைத்து, ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.   

Post a Comment

0 Comments