Urulaikkilanku Alva - உருளைக்கிழங்கு அல்வா


2''x2'' அளவான உருளைக்கிழங்கு அல்வா
துண்டுகள்

   தேவையான பொருட்கள் 

  • உருளைக்கிழங்கு - 250 கிராம் 
  • சீனி -500கிராம் 
  • தேங்காய் - பாதி 
  • ஏலப்பொடி - 1 தே.க(மட்டமாக)
  • மாஜரின் - 50 கிராம் 
  • சிறிதாக வெட்டிய கஜீ - 3 மே.க (மட்டமாக)
  • மஞ்சள் கலரிங் - 1/2 தேக்கரண்டி 

செய்முறை 

  1. உருளைக்கிழங்கை அவித்து கட்டி இல்லாமல் நன்கு மசித்துக் கொள்க.

  2. தேங்கயாய் துருவி ஓரளவாக வறுத்தெடுத்து மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கிலிட்டு, சீனியையும் சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்க. 

  3. பின்பு தாச்சியை அடுப்பில் வைத்து, 25 கிராம் மாஜரீனையிட்டு உருக வைத்து, அதனுள் சிறிதாக வெட்டிய கஜீவையிட்டுப் பொன்னிறமாகப் பொரித்து வடித்தெடுத்துப் பின்பு, மிகுதியாகவுள்ள மாஜரீனில் பிசைந்து வைத்துள்ள உருளைக்கிழங்கு கலவையைக் கொட்டி இடைவிடாது நன்கு கிளறுக.
  4. கலவை ஓரளவாக திரளத் தொடங்கும் போது மிகுதியாக உள்ள 25 கிராம் மாஜரினும் ஏலப்பொடியும் சேர்த்து, இடைவிடாது கிளறிக் கலவை உருண்டு திரளும் பதத்தை அடைந்ததும் உடனடியாக அடுப்பிலிருந்து இறக்கிக் கலரிங், பனானா எசன்ஸ் சேர்த்து, மாஜரின் பூசிய தட்டில் கொட்டி ஒரு அங்குலம் தடிப்பாக பரவி 2''x2'' அளவான துண்டுகளாக வெட்டி எடுத்துப் பரிமாறலாம்.

Post a Comment

0 Comments