Traditional Rich Kichdi Recipe - டிரடிஷனல் ரிச் கிச்சடி செய்முறை


சுவையான கிச்சடி ரெசிபி தமிழில். வீட்டில் இலகுவாக தயாரிக்கப்படக்கூடிய இந்த  கிச்சடி சுவையானதாகவும் புரதம் நிறைந்ததாகவும், சத்தானதாகவும் இருக்கும்.

 தேவையான பொருட்கள் 

கவுனி  - 50 கிராம் 

மூங்கில் அரிசி - 50 கிராம் 

சிவப்பு அரிசி - 50 கிராம் 

கோதுமை ரவை - 50 கிராம் 

பச்சைப் பட்டாணி - 100 கிராம் 

கேரட் பீன்ஸ் - 100 கிராம் 

தக்காளி - 2

பச்சைமிளகாய் - 2

நறுக்கிய வெங்காயம் - 1

பூண்டு பல் (கீறியது) - 6

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் 

கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன் 

எலுமிச்சை ஜூஸ் - 1 டீஸ்பூன் 

கீறிய பச்சைமிளகாய் - 2

கடுகு - தேவையான அளவு 

கறிவேப்பிலை - தேவையான அளவு 

உப்பு - தேவையான அளவு 

எண்ணெய் - தேவையான அளவு 

செய்முறை 

அரிசி வகைகளை வறுத்துப் பொடிக்கவும்.

காய்ந்த எண்ணெயில் கடுகு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து ஒவ்வொரு காயகப் போட்டு வதக்கவும்.

உப்பு, மஞ்சள்பொடி சேர்த்து 5 மடங்கு நீரை ஊற்றி கொதிக்கும் பொழுது பொடித்த அரிசி ரவை வகைகளைப் போட்டு சிம்மில் வைத்துப் பிரட்டவும்.

வெந்ததும் மல்லித் தழையை தூவி எலுமிச்சம் பழம் பிழிந்து சூடாகப் பரிமாறவும்.    

Post a Comment

0 Comments