Thinai Aval Roll Recipe - தினை ரோல் செய்முறை

 

வீட்டில் தினை ரோல் செய்வது எப்படி? முழுமையான ரெசிபி தமிழில். இது  தினையை பயன்படுத்தி இலகுவாக தயாரிக்க கூடிய ஓர் ஆரோக்கியமான மற்றும் சுவையான உணவாகும்.


தேவையான பொருட்கள் 

  • உடுப்பி ருச்சி சோள சூப் மிக்ஸ் - 1 பாக்கெட்
  • தினை அவல் - 2 கப் 
  • தேங்காய் எண்ணெய் - 1 கரண்டி 
  • கடுகு - 1 டீஸ்பூன் 
  • உளுத்தம் பருப்பு -  1 டீஸ்பூன் 
  • கடலை பருப்பு - 1 டீஸ்பூன் 
  • மிளகாய் வத்தல் - 2
  • பெருங்காயம் - தேவைக்கு 
  • கறிவேப்பிலை - தேவைக்கு 
  • உப்பு - தேவைக்கு 

செய்முறை 

  1. அவல் மூழ்கும்வரை தண்ணீர் விட்டு பத்து நிமிடங்கள் ஊறவைக்கவும்.

  2. எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், மிளகு வத்தல், கறி வேப்பிலை தாளித்து, ஊறிய அவலைப் பிழிந்து இதில் சேர்த்து வேகவிடவும்.

  3. வெந்த பின் சோள சூப் மிக்ஸ், உப்பு சேர்த்து மேலும் 5 நிமிடம் வேகவிடவும்.

  4. குழல்களாக உருட்டி(ரோல்களாக) சட்னியுடன் பரிமாறவும். 

Post a Comment

0 Comments