Jaggery Adai/ Vella Adai Recipe - வெல்ல இலை அடை செய்முறை

 
இந்த எளிதான வெல்ல இலை  அடை தயாரிப்பது எப்படி என்பதை தமிழில் அறிந்துகொள்ளுங்கள். வெல்லம் மற்றும் அரிசி மாவுடன் செய்யக்கூடிய அடை பண்டிகை காலங்களில் ஒரு சிறப்பு இனிப்பு உணவாக தயாரிக்கப்படுகிறது. முழுமையான ரெசிபி கீழே!

தேவையான பொருட்கள் 

  • கெட்டி அவல் - 1 கப் 
  • தேங்காய் துருவல் - 1 கப் 
  • வெல்லம் - 3/4 கப் 
  • ஏலப்பொடி - சிறிதளவு 
  • பச்சரிசி - 2 கப் 
  • வாழை இலை - தேவைக்கு 
  • நெய் - தேவைக்கு 

செய்முறை 

  1. ஊறவைத்த பச்சரிசியை, நைஸாக அரைத்து, கெட்டி தோசை மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும். 

  2. வெல்லத்தை சுத்தம் செய்து, லேசான பாகுபதத்தில் வைத்து, தேங்காய்த் துருவல், ஏலப்பொடியை சேர்க்கவும்.

  3. சிறிய அளவில் வாழை இலையை வெட்டி, நெய்யைத் தடவி, தோசை மாவை அதில் பரத்தவும். 

  4. அதன் மேல் வெல்லப் பூரணத்தையும் பரத்தினாற்போல் வைத்து, பதினைந்து நிமிடம் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.   

Post a Comment

0 Comments