Ragi Panankarkandu Puttu Recipe - ராகி, பனங்கற்கண்டு புட்டு செய்முறை


ராகி பனங்கற்கண்டு புட்டு (ராகி புட்டு) செய்வது எப்படி? செய்முறையை தமிழில். ராகி புட்டு ஒரு ஆரோக்கியமான மற்றும் அதே நேரத்தில் சுவையான காலை உணவு செய்முறையாகும். 

தேவையான பொருட்கள் 

  • முழு கேழ்வரகு - 1 கப் 
  • பனங்கற்கண்டு பொடி - 1/2 கப் 
  • வெள்ளை எள் - 1/4 கப் 
  • ஏலம் - 5 
  • முந்திரி - 20 கிராம் 
  • திராட்சை - 20 கிராம் 
  • நெய் - தேவைக்கு 

செய்முறை 

  1. கேழ்வரகை வெறும் வாணலியில் வறுத்து, நைசாக பொடிக்கவும்.

  2. உப்பு, நீர் சேர்த்துக் கட்டியில்லாமல் பிசறி, அரை மணி நேரத்திற்குப் பின் ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யை விட்டு ஆவியில் வேகவிடவும்.

  3. வறுத்த வெள்ளை எள்ளை ஒன்றிரண்டாகப் பொடித்து பனங்கற்கண்டு நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, ஏலப்பொடி சேர்க்கவும்.

  4. சூட்டில் பனங்கற்கண்டு தானாக இளகி சேர்ந்துவிடும்.    

Post a Comment

0 Comments