Pulukkodiyal Ma Laddu - புழுக்கொடியல்மா லட்டு

 


30  லட்டுகள் 

தேவையான பொருட்கள்

  • புழுக்கொடியல் - 15 பாதி 
  • (மா 1/2 சுண்டு , குறுணல் 1/2 சுண்டு )
  • தேங்காய் - பாதி 
  • சீனி - 3/4 சுண்டு /200 கிராம் 
  • தண்ணீர் - 1/2 தம்ளர் 
  • மாஜரின் - 1 தே. க (நிரப்பி)
  • ஏலப்பொடி - 1 தே. க (மட்டமாக)
  • பிளம்ஸ் - 4 மே. க 

செய்முறை   

  1. புழுக்கொடியலைச் சிறு சிறு துண்டுகளாக முறித்தெடுத்து நன்றாக இடித்து, 1/2 சுண்டு புழுக்கொடிக் குறுணல் வேறாகவும் 1/2 சுண்டு புழுக்கொடியல் மாவு வேறாகவும் எடுத்து வைத்துக் கொள்க.

  2. தேங்காயைத் துருவி பொன்னிறமாக வறுத்தெடுத்துக் கொள்க.

  3. தாச்சியில் சீனியைப் போட்டு, 1/2 தம்ளர் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து பாகு காய்ச்சுக.  பாகு பொங்கிக் கொதிக்க தொடங்கியதும் தேங்காய்ப்பூ, புழுக்கொடியல் மாவு, குறுணல் என்பவற்றையிட்டுச் சேர்த்து,  மஜாரினுமிட்டு இடைவிடாது கிளறி கலவை திரளத் தொடங்கியதும் பிளம்ஸ், ஏலப்பொடி என்பன சேர்த்துக் கலந்து தாச்சியை அடுப்பிலிருந்து இறக்கிக் கலவையை வேறொரு பாத்திரத்தில் கொட்டி, சூட்டுடனேயே ஒரளவான தேசிப்பழமளவு உருண்டையாக பிடித்து உலரவைத்துப் பரிமாறலாம். 

 

Post a Comment

0 Comments