Recipe - சுவையான உருளை கிழங்கு பற்றிஸ் செய்முறை

 
சுவையான உருளைக்கிழங்கு பற்றிஸ் ரெசிபி தமிழில் இங்கே பெற்றுக்கொள்ளுங்கள். இலகுவான மற்றும் மொறுமொறுப்பான ஓர் ஈவினிங் ஸ்னாக் ரெசிபி உங்களுக்காக தமிழிலில்.


தேவையான பொருட்கள் 

  • வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - 2
  • துருவிய தேங்காய் - 1/2 கப் 
  • பொடியாக நறுக்கிய கொத்து மல்லி - 1/2 கப் 
  • நறுக்கிய பச்சைமிளகாய் - 3
  • உலர் திராட்சை , முந்திரி  - 1 டேபிள்ஸ்பூன் 
  • சர்க்கரை - 1 டேபிள்ஸ்பூன் 
  • மைதா - 3 டேபிள்ஸ்பூன் 
  • உப்பு - தேவைக்கு 
  • நெய் - தேவைக்கு 
  • எண்ணெய் - தேவைக்கு 

செய்முறை 

  1. தண்ணீர் விடாமல், திராட்சை, முந்திரி,சர்க்கரை,தேங்காய், பச்சைமிளகாயை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். 

  2. மசித்த உருளையுடன் மைதா, உப்பு சேர்த்துப் பிசைந்து, எண்ணெய் தொட்டுக்கொண்டு சொப்புகளாக்கவும்.

  3. மிக்ஸியில் சுற்றிய கலவையை, சொப்புக்குள் வைத்து மூடி, உருட்டி, உள்ளங்கையில் வைத்து லேசாக அழுத்தி, மாவில் பிரட்டி வைக்கவும்.

  4. சூடான தவாவில் பேட்டீஸைப் போட்டு, நெய் விட்டு, இருபுறமும் நன்கு பொன்னிறமானதும் எடுக்கவும்.  

Post a Comment

0 Comments