Naddi tirai Balls Recipe - நட்டி டிரை பால்ஸ்




வீட்டில் தயாரிக்கலாம் நட்டி டிரை பால்ஸ். ரெசிபி தமிழில்! இது எளிமையான வீட்டுப் பொருட்களால் ஆன ஒரு டங்கியான இனிப்பாகும். முழு செய்முறை வழிமுறைகளையும் இங்கே தமிழில் பெற்றுக்கொள்ளுங்கள்.

 தேவையான பொருட்கள் 

  • வறுத்த வேர்க்கடலை - 250 கிராம் 
  • பச்சரிசி - 200 கிராம் 
  • வெள்ளை எள் - 100 கிராம் 
  • முந்திரி - 100 கிராம் 
  • பாகு வெல்லம் - 500 கிராம் 
  • தேங்காய் - 1
  • மைதா மாவு - 2 டீஸ்பூன் 
  • மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் 
  • ஏலப்பொடி - தேவைக்கு 
  • சுக்குப்பொடி - தேவைக்கு 
  • எண்ணெய் - தேவைக்கு 

செய்முறை 

  1. எள்ளை வெறும் வாணலியில் வறுக்கவும். 

  2. முந்திரியை பொடிக்கவும். துருவிய தேங்காயை பொன்னிறத்தில் வறுக்கவும். 

  3. சுத்தம் செய்த வெல்லத்தைக் கெட்டிப் பாகாக்கி, சுக்கு, ஏலப்பொடி கலக்கவும்.

  4. தேங்காய் மற்றும் பொடிகளை ஒன்றாக்கிச் சிறிது சிறிதாக பாகு விட்டுக் கலந்து சிறு உருண்டைகளாக்கி மைதாவில் பிரட்டி ஒருநாள் முழுவதும் பரத்தினாற்போல் வைக்கவும். 

  5. ஊறவைத்த அரிசியை மைய அரைத்து தோசை மாவு பதத்துக்குக் கரைத்து, அதில் உருண்டைகளைத் தோய்த்து பொரித்தெடுக்கவும்.  

Post a Comment

0 Comments