Masmalos - மாஸ்மலோஸ் வகை II

 


30 - 45 துண்டுகள் 

தேவையான பொருட்கள் 

  • சீனி - 350 கிராம் 
  • திரவ குளுக்கோஸ் - 100 கிராம் 
  • ஜெலற்றீன் - 25 கிராம் 
  • சித்திரிக்கமிலம் - 1 சிட்டிகை 
  • கலரிங் - அளவிற்கு 
  • எசன்ஸ் - 3 துளிகள் 
  • ஐசிங் சுகர் - 100 கிராம் 
  • கோன் பிளா - 100 கிராம் 
  • தண்ணீர் - 3/4 தம்ளர் (சீனி காய்ச்சுவதற்கு)
  •                       3/4 தம்ளர் (ஜெலற்றீன் கரைப்பதற்கு)
  • மாஜரீன் - 1 மே.க 

செய்முறை 

  1. ஜெலற்றீனைப் பாத்திரத்திலிட்டு பிறிதொரு கொதிநீருள்ள பாத்திரத்தில் அமிழ்த்தி வைத்துக் கொண்டு 3/4 கோப்பை பொங்கிக் கொதித்த நீரை அதனுள் ஊற்றி நன்கு கரைத்துக் கொள்க.

  2. தாச்சியில் சீனியையிட்டு 3/4 கோப்பை தண்ணீர் ஊற்றி கரண்டி வைக்காமல் சீனி முற்றாக கரையும்வரை வெப்பமாக்கியபின் லிக்குவிட் குளுக்கோஸ் இட்டு கரண்டியால் நன்றாகச் சேர்த்து 245F வரும்வரை வெப்பமாக்கி அடுப்பிலிருந்து இறக்கி 5 நிமிடங்களுக்கு ஆறவிட்ட பின்பு ஜெலற்றீன் கலவை, சிற்றிக் அசிட் என்பன இட்டு ஒன்றாகச் சேர்த்து நன்கு ஆறவிடவும். ஆறிய பின்பு எசன்ஸ், கலரிங் என்பன சேர்த்துக் கலவையை பீற்றரால் நன்றாக அடிக்கவும். ( 1 மணித்தியாலத்திற்கு ஒரு தடவையென விட்டு விட்டு 3 முறை அடிக்கவும்.)

  3. தட்டிற்கு மாஜரின்  கலவையை ஊற்றிப் பதமாகும் வரை 12 மணிநேரம் வைக்கவும்.

  4. கோன்பிளா, ஐசிங்சுகர் என்பவற்றைக் கலந்து அரித்தெடுத்து தட்டில் பரவியுள்ள கலவை மேல் தூவி துண்டுகளாக வெட்டியெடுத்து ஐசிங் சுகர் கலவையில் புரட்டியெடுத்து உலர வைத்துப் பொதி செய்து கொள்க.       

Post a Comment

0 Comments