Kandos - கன்டோஸ்


25 பேருக்கு தேவையான கன்டோஸ் 

தேவையான பொருட்கள் 

  • பால்மா - 3 மே.க (நிரப்பி)
  • சீனி - 2 மே.க (நிரப்பி)
  • கொக்கோ - 1 மே.க (நிரப்பி)
  • மாஜரின் - 1மே.க (நிரப்பி)
  • தண்ணீர் - 2 மே.க  
  • வனிலா- 1 மே.க 
  • கஜீ - 20 பாதி 
  • மாஜரின் - 50கிராம் (பொரிப்பதற்கு)

செய்முறை 

  1. இருபது பாதிக் கஜீக்களை, 50 கிராம் மாஜரீனைத் தாச்சியில் காயவைத்து பொரித்தெடுத்துக் கொள்க.

  2. பால்மாவையும் கொக்கோ பவுடரையும், ஈரமற்ற பாத்திரத்திலிட்டுக் கலந்து வைத்துக் கொள்க.

  3. தாச்சியில் சீனியைப் போட்டு 2 மேசைக்கரண்டி நீர் விட்டுப் பாகு காய்ச்சுக. பாகு காய்ச்சும் போது, முதலில் சீனி முழுவதும் கரைந்து வெளுப்பான நுரைப்பதம் தோன்றும் போது மாஜரீனை அதனுள் போட்டு மாஜரின் உருகியதும் அடுப்பில் இருந்து தாச்சியை உடனடியாக இறக்கி, வானிலவும் சேர்த்துப் பிறிதொரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்க.

  4. பின்பு பாகு உள்ள பாத்திரத்தைக் குளிர்நீருள்ள பாத்திரத்தில் பாகின் சூடு ஓரளவு தணியும் வரை வைத்துக் கொண்டு அதனுள் கலந்து வைத்துள்ள பால்மாக் கலவையைக் கொட்டி நன்றாக சேர்த்துக் கொள்க.

  5. பின்பு இக்கலவையை பெரிய நெல்லிக்காயளவு  உருண்டைகளாக உருண்டைகளாக உருட்டிக் கொண்டு பொலீத்தின் காகிதத்தில் வைத்து மெல்லியதாக தட்டிக் கொண்டபின், பொரித்த கஜீவை நடுவே வைத்துச் சொக்கலேட் கலவையால் மூடிச் சீர்படுத்திய பின்பு பரிமாறலாம்.

    குறிப்பு

    கஜீவிற்குப் பதிலாக ஒரு அங்குல நீளமான வேபர்ஸ்  பிஸ்கட்டையும் பயன்படுத்தலாம். அல்லது சாதாரண உருண்டைகளாகவும் உருட்டிக் கொள்ளலாம்.      

Post a Comment

0 Comments