Cokkies Recipe - கொக்கீஸ்


 32  கொக்கீஸ் 

தேவையான பொருட்கள் 

  • முட்டை - 1
  • சீனி - 1 மே.க (நிரப்பி)
  • மாஜரின் - 1 தே. க (நிரப்பி)
  • உப்பு - அளவிற்கு
  • தேங்காய்ப்பால் / பால் - 1 தம்ளர் 
  • அரிசிமாவு - 1 சுண்டு (வறுக்காதது)
  • வனிலா - 1 மே. க 
  • தேங்காயெண்ணெய் - 1/2 போத்தல் 
  • கலரிங் (விரும்பியது) - 1 தே. க 

செய்முறை 

  1. இடித்து அரித்தெடுத்த அரிசிமாவை ஒரு மணி நேரம் நிழலில் உலர வைத்தெடுத்துக் கொள்க.

  2. பாத்திரத்தில்  மாஜரினைப் போட்டுச் சீனியையும் சேர்த்துக் கலந்து கொண்ட பின்பு முட்டையை உடைத்து விட்டு வனிலாவும் உப்பும் சேர்த்து நன்றாக அடிக்கவும்.

  3. பின்பு அடித்த கலவையில் பாலை விட்டுச் சேர்த்து, மாவைச் சிறிது சிறிதாகத்  தூவி முழுவதுமாகச் சேர்த்துக் கலந்து நீர்த்தன்மையான பதத்திற்கு கரைத்து வைத்துக் கொள்க.

  4. பின்பு தேங்காயெண்ணையைக் கொதிக்கவைத்து, கொக்கிஸ் அச்சைக் கொதி எண்ணையில் சிறிது நேரம் வைத்தெடுத்து மாக்கரைசலில் அச்சின் அரைவாசி உயரம் அமிழும் வரை அச்சை அமிழ்த்தித் தோய்த்தெடுத்துக் கொதிக்கும் எண்ணெயில் அச்சை அமிழ்த்திக் கொக்கிஸ் எண்ணெயில் கழன்றதும் அச்சை எடுத்துக் கொள்க.

  5. இவ்வண்ணமே ஒவ்வொரு கொக்கிஸ்சாக எண்ணெயிலிட்டு பொரிந்ததும் எடுத்துப் பரிமாறலாம். 

Post a Comment

0 Comments