Green Piece Vada Curry Recipe - பச்சைப் பட்டாணி வடைகறி

 
பச்சை பட்டாணி வடைகறி  என்பது பட்டாணி மற்றும் உருளைக்கிழங்கால் செய்யப்பட்ட எளிதான மற்றும் சுவையான மிருதுவான ஓர் உணவாகும் . இதற்கன ரெசிபியை தமிழில் பெற்றுக்கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள் 

  • பச்சைப் பட்டாணி - 500 கிராம் 
  • உருளைக்கிழங்கு - 500 கிராம் 
  • அரிசி மாவு - 1/2 கப் 
  • பிரட் கிரம்ஸ் - 1/2 கப் 
  • தேங்காய் - 1 மூடி 
  • பச்சைமிளகாய் - 4 
  • எள் - 5 டீஸ்பூன் 
  • உப்பு - தேவைக்கு 
  • எண்ணெய் - தேவைக்கு 

செய்முறை 

  1. பச்சைப் பட்டாணி, உருளைக்கிழங்கை வேகவைக்கவும். உருளைக்கிழங்கை மசித்து, அரிசி மாவுடன் சேர்த்துப் பிசையவும். 

  2. உப்பு, பச்சைமிளகாய், தேங்காயை அரைத்து, பட்டாணியையும் கடைசியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

  3. பட்டாணிக் கலவையை மாவில் வைத்து மூடி பிரட் க்ரம்ஸ் மற்றும் எள் சேர்ந்த கலவையில் பிரட்டி, தோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும்.       

Post a Comment

0 Comments