Ginger Garlic Paneer Rasam Recipe - இஞ்சி பூண்டு பனீர் ரசம் செய்முறை


படிப்படியான வழிமுறைகளுடன் இஞ்சி பூண்டு பன்னீர் ரசம் செய்முறையை தமிழில். இது பன்னீர், பூண்டு, இஞ்சி மற்றும் மசாலாப் பொருட்களுடன் கூடிய  சுவையான மற்றும் ஆரோக்கியமான ரச செய்முறையாகும். 

தேவையான பொருட்கள் 

  • உடுப்பி ருச்சி ரசப்பொடி - 2 டீஸ்பூன் 
  • வேகவைத்த பருப்புத் தண்ணீர் - 2 தம்ளர் 
  • தக்காளி - 2
  • பூண்டு - 12 பற்கள் 
  • இஞ்சி - 1 இன்ச் நீளம் 
  • பனீர் - 1/4 தம்ளர் 
  • உப்பு - தேவைக்கு 
  • மஞ்சள்தூள் - தேவைக்கு 
  • வெல்லத்தூள் - 1 டீஸ்பூன் 
  • நெய் - 1 டீஸ்பூன் 
  • கடுகு, சீரகம், கறிவேப்பிலை, காயம் - தாளிக்க 

செய்முறை 

  1. பருப்பைத் தண்ணீரில், உப்பு, பெருங்காயம், மஞ்சள்தூள் போட்டுக் கொதிக்கவிடவும்.

  2. தக்காளி, பூண்டு, இஞ்சியைத் தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி, அந்தச் சாற்றையும் சேர்க்கவும்.

  3. உப்புச் சேர்த்துப் பன்னீரையும் சேர்க்கவும். 

  4. நெய்யில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்துக் கொட்டி, வெல்லப் பொடியைப் போட்டுக் கலக்கவும். 

Post a Comment

0 Comments