How to make Elladai/Thattai - எள்ளடை செய்வது எப்படி?


வீட்டில் எள்ளடை செய்வது எப்படி? முழுமையான ரெசிபி தமிழில்!  எள்ளடை அல்லது தட்டை ஒரு சிற்றுண்டியாக  பண்டிகைகளின் போது தயாரித்து பரிமாறப்படக்கூடியது.

 தேவையான பொருட்கள் 

  • அரிசி மாவு - 1/2 தம்ளர் 
  • கடலைமாவு - 1/4 தம்ளர் 
  • வறுத்து அரைத்த பொட்டுக்கடலை - 1/4 தம்ளர் 
  • நிலக்கடலை மாவு - 1/4 தம்ளர் 
  • தினை, கம்பு மாவு இரண்டும் சேர்த்து - 1/4 தம்ளர் 
  • முந்திரி - 5
  • பாதாம் - 5
  • பிஸ்தா - 5 (நெய்யில் வறுத்துப் பொடிக்கவும்)
  • உப்பு - தேவைக்கு 
  • ஓமம் - தேவைக்கு 
  • பெருங்காயம் - தேவைக்கு 
  • நெய் - தேவைக்கு 
  • காரத்தூள் - 1 டீஸ்பூன் 
  • எண்ணெய் - பொரிக்க 

செய்முறை 

  1. சிறிது நெய் சேர்த்த எண்ணெயைச் சுடவைத்து, அதில் தண்ணீர், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும்.

  2. மாவு வகைகள், பொடித்த பருப்பு வகைகளைப் போட்டுக் கிளறவும்.

  3. மாவு வெந்தபின் ஓமம், பெருங்காயம், காரம் சேர்த்து ஆறியபின் வட்டமான வில்லைகளாகத் தட்டி தட்டைபோல் எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.   

Post a Comment

0 Comments